கந்துவட்டி கொடுமையால் ஜோசியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜோசியர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி பரபரப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூலைவாய்காள் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் இவர் ஜோசியராக இருந்து வருகிறார். இவர் தனது மனைவியின் சகோதரருக்காக குடும்ப சூழ்நிலை காரணமாக அப்பகுதியைச் சார்ந்த ஒருவரிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். 10 லட்ச ரூபாய் பணம் பெற்று இருந்த நிலையில் அதில் ஒரு பகுதியை அவர்  திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர் மேலும் 25 லட்ச ரூபாய் பணத்தை தருமாறு கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். 

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஜோசியர் மாரியப்பன் அவரது மனைவி பத்தினி, மகன் சந்துரு, மகள் அம்சவேணி ஆகிய நான்கு பேரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்குள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது சுற்றி நின்ற காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி  அவர் மீது தண்ணீரை ஊற்றி அவர் வைத்திருந்த தீப்பெட்டி,மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி ஏறிந்தனர்.

பின்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாரியப்பன் குடும்பத்தோடு விசாரணைக்காக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *