திரையரங்குகளில் T20 உலக கோப்பை நேரலை : கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்

இந்திய துணைக்கண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு “மதம்” போல சித்தரிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் இருக்கும் போது “கிரிக்கெட் எங்களது மதம்… சச்சின் எங்களது கடவுள்” என்ற பதாகையை ஏந்தி மக்கள் கொண்டாடுவதை நாம் பார்த்திருப்போம். அப்படியான கிரிக்கெட்டை திரையரங்கில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற நமது சிறுவயது கனவை நினைவாக்க இந்தியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனமான ஐ-நாக்ஸ் முன் வந்துள்ளது.

அக்டோபர் 16-ம் தேதி தொடங்கவிருக்கும் எட்டாவது ICC T20 உலகக் கோப்பையில், இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் நேரடியாக INOX திரையரங்கில் ஒளிபரப்பாகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக INOX நிறுவனம் தெரிவடித்துள்ளது
இது தொடர்பாக INOX வெளியிட்ட அறிக்கையில், “அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தொடங்கி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி வரை இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள INOX மல்டிபிளக்ஸ்களில் நேரடியாக ஒளிபரப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *