நல திட்டங்கள் வழங்குவதாக 4 ஆயிரம் பேரிடம் பல லட்சம் ஆட்டய போட்ட ஆசிரியர்

நல திட்டங்கள் வழங்குவதாக  கூறி பல்வேறு கிராமங்களில்   அறக்கட்டளை சார்பில்   சுமார்  4 ஆயிரம் நபர்களிடம்  50 லட்சம் மோசடி – மோசடி செய்த  நபர்களிடம்  இருந்து பணத்தை பெற்று தரக்கோரி பாதிக்கப்பட்ட ஏழை எளிய பொதுமக்கள்  கண்ணீர் மல்க  காவல் நிலையத்தில் புகார் –  பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள   ஏழை எளிய பொதுமக்களிடம் அறக்கட்டளை சார்பில்  பல்வேறு  நலத்திட்ட வழங்குவதாக கூறி சுமார்  4000 க்கும் மேற்பட்ட  பொதுமக்களிடம் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்ணீர் மல்க  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் மேம்பாட்டு அறக்கட்டளை உள்ளது. இதில்  நிறுவனராக பாலாஜி  உள்ளார். வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி தாஸ்  நல்லூர் கிராமத்தில் உள்ள  நிதி உதவி பெறும்  பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து  வருகிறார்.

இவர்  வந்தவாசி சுற்றியுள்ள சுமார் 20க்கு மேற்பட்ட   மருதாடு, கெங்கம்பூண்டி, கல்லாங்குத்து  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஏழை எளிய பொதுமக்களிடம்  தலா  1250 ரூபாய் வசூல் செய்து உள்ளனர்.  இந்த நபர்களுக்கு  முதலில் தையல் மிஷின்,ஆடு, மாடு, உள்ளிட்ட பல்வேறு  நலத்திட்ட உதவிகள்  செய்து உள்ளனர். இதை பார்த்த பல்வேறு கிராமங்களில் உள்ள   ஏழை எளிய  பொதுமக்கள் தலா  1250 ரூபாய்  பணம் கட்ட தொடங்கினர். 

இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து  சுமார்  4000க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம்  தலா  1250 ரூபாய் விதம் 50 லட்சம் ரூபாய் வரை  வசூல் செய்துள்ளார். இந்தப் பணத்தை அனைத்தையும் நிதி உதவி பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி தாஸ் வசூல் செய்து செங்கல்பட்டு மாவட்டத்தை  சேர்ந்த பாலாஜியிடம் கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் பணத்தைக் கட்டியவர்களுக்கு பல மாதங்களாக   நல திட்ட உதவிகளான ஆடு, மாடு, தையல் இயந்திரம்  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட எதுவும்   அந்தோணி தாசிடம் கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக செங்கற்பட்டு மாவட்டத்தை   சேர்ந்த பாலாஜியிடம்  கேட்க  போகும்போது அந்தோணி தாசுக்கு பேர் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தை  சேர்ந்த பாலாஜி எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் வந்தவாசி சுற்றியுள்ள  பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல முறை  நல்லூர் கிராமத்தில் பணிபுரியும் இடம் மற்றும் சென்னாவரம் கிராமத்தில் உள்ள அவரது  வீட்டிற்கு சென்று  அந்தோனி தாஸ்யிடம் கேட்டால்  சரியான முறையில் பதில் வரவில்லை.

இதனால் பல்வேறு  நல திட்ட உதவிகள் பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய  நிதியுதவி தலைமை ஆசிரியர் அந்தோணி தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிய பணத்தை மீண்டும் பெற்று தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெள்ளார் உதவி தொடக்க கல்வி அலுவலகம், தெள்ளார் காவல் நிலையத்தில்  கண்ணீர் மல்க  புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து  ஏழை எளிய பொதுமக்கள் கட்டிய பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு நல திட்ட உதவிகள்  தருவதாக கூறி சுமார் 4 ஆயிரம் நபரிடம்  தலா 1250 ரூபாய் விதம் 50  லட்சம்  ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏழை எளிய மக்களை ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *