சிவகாசி பட்டாசுகளின மற்ற மாநில தடையை நீக்குவார் முதல்வர் – எம்.பி.மாணிக்கம் தாகூர்

பாரத ஒற்றுமையாத்திரை செல்லும் ராகுல் காந்தி டெல்லி செல்லும் நேரம் மோடி வீட்டுக்கு செல்வார் சிவகாசி பட்டாசு தொழிலை நசுக்கும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் விதிக்கும் தடையை நீக்க தமிழக முதல்வர் மற்ற மாநிலங்களுக்கு தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாணிக்கம் தாகூர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்.

திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் தலைமையில் வேலைவாய்பு முகாம் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமில் 1500 பேர் கலந்துகொண்டு 54 நிறுவனங்களில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு மாலைக்குள் வேலைவாய்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.: பல்வேறு நிறுவனங்களில் இருந்து 8 முதல் டிப்ளமோ , டிகிரி முடித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் திறமை உண்டு, அவரவர்களின் திறமைக்கு ஏற்ப வெற்றியினை பெற வாய்பளிக்க இந்த இடம் உதவும் திறமையை வளர்த்து கொள்ள உங்களின் செயலை தினமும் மேம்படுத்துங்கள் என மாணிக்கம் தாகூர் MP கூறினார் குத்துவிளக்கேற்றி வேலைவாய்ப்பு முகாமை துவங்கிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்

இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 54 நிறுவனங்களில் இருந்து சுமார் 1500 பேர் வரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பிரபல நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் ஐபிஎம் போன்ற  நிறுவனங்களில் இருந்து வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றனர் திருப்பரங்குன்றம் | திருமங்கலம் பகுதியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் நீ அடுத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிவகாசி போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரியில் துவங்கிய பாரத ஒற்றுமை யாத்திரை கேரளா கர்நாடகா வயலும் பெரும் பரபரப்பை பெற்றுள்ளது 700 கிலோமீட்டர் வரை சென்றுள்ள ராகுல் காந்தி டெல்லி செல்லும் நேரம் மோடி வீட்டுக்கு செல்வார்.

சிவகாசி பட்டாசுகளை டெல்லி ஒன்றில் வட மாநிலங்கள் தடை விதித்துள்ளன கடந்த காலகட்டங்களில் இதே போல் தடை விதிக்கப்பட்ட போது முதல்வரை எடுத்த நடவடிக்கையில் தடை நீக்கி விற்பனை செய்யப்பட்டது அதேபோல் இந்த வருடமும் ஏற்பட்டுள்ள தடையை நீக்கி சிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தடை விதிக்கப்பட்ட மாநில முதல்வருடன் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி தடையை நீக்கி  விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும். தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது வரவேற்பிற்குரியது. இது குறித்து பாராளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்பிய போது ஒன்றிய அரசு மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியது.

தற்போது தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆன்லைனில் விளையாட்டை தடை செய்ய கொண்டு வந்தது பெரும் வரவேற்பிற்குறியது. இதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆன்லைன் ரம்மியை தடை சட்டம் கொண்டு வந்தால் மிகவும் பாராட்டும் விதமாக அமையும் அதற்கான முயற்சியை  செய்வோம் ஆன்லைன் ரம்மியை ரத்து செய்ய ஆளுநர் காட்டிய வரவேற்பை பாராட்டுகிறோம் இதேபோல் நீட் சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார் இது ஆர்எஸ்எஸின் கருத்தாகவே நாம் பார்க்க முடிகிறது

ராஜராஜ சோழன் என்று இந்து ஒரு மதத்தையோ இனத்தையோ பிரித்து பார்க்க முடியாது . இந்து என்ற அவருடைய பெருமையை நாம் சிறுமைப்படுத்துவது போல் செய்தல் ஆகாது. ஆனால் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அவரை இந்து என்று அடைமொழி கொடுத்து சிறுபான்மை படுத்த நினைக்கிறது இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்காகவே ஆர் எஸ் எஸ்ஸிற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசு பதவி ஏற்று  ஒரு ஆண்டாகிறது இதில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர் வரும் காலத்தில் அரசு வேலைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மாணிக்க தாகூர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *