சர்க்கரை ஆலை நிர்வாகிகள், விவசாயிகளிடம் ஆட்டயபோட்ட 300 கோடியை கொத்தாக தூக்கிய ஆட்சியர்

தஞ்சையை அடுத்துள்ள  திருமண்டங்குடியில்  இயங்கிவந்த திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகிகள்  விவசாயிகளிடம் 300 கோடி ரூபாய் நூதன மோசடி செய்ததாலும்,  விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 80 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும்  வழங்காமல் கரும்பு விவசாயிகளை ஏமாற்றிவிட்டு  ஆலையை மூடிவிட்டு சென்றுவிட்டதால்  கடந்த 5 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பணமும், பத்திரமும் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தலையிட்டால்  இன்று சுமூக தீர்வு ஏற்பட்டதால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி:

தஞ்சையை அடுத்துள்ள திருமண்டங்குடியில்  இயங்கி வந்த தனியார் சர்க்கரை ஆலையான  திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 80 கோடி ரூபாயையும் வழங்காமல்,   5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட   கரும்பு விவசாயிகளின்  விளைநிலங்களின் பத்திரங்களை வாங்கி விவசாயிகளுக்கு தெரியாமல் 3 வங்கிகளில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு ஆலையை மூடிவிட்டு சென்றதால் விவசாயிகள் 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களில்  ஈடுபட்ட நிலையில்,

வேறு ஒரு நிர்வாகம்  திருஆரூரான் சர்க்கரை ஆலையை  விலைக்கு வாங்கியதால்,   அவர்கள் பிரச்னையை தீர்க்க மாவட்ட ஆட்சியரை அணுகிய நிலையில், இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது

கூட்டத்தில் அரசு தரப்பு அலுவலர்கள், திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள்,  ஆலையை வாங்கிய தனியார் நிறுவன நிர்வாகிகளும் பங்கேற்ற கூட்டத்தில் 

திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை  நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள்  பேசுகையில், ஆலை நிர்வாகிகள் விவசாயிகளிடம் அவர்களது நிலத்தின் பத்திரங்களைப் பெற்று,  விவசாயிகளுக்கு தெரியாமலேயே  ஸ்டேட் வங்கி, ஐஓபி,  கார்ப்பரேஷன் வங்கி என 3 வங்கிகளில்  300 கோடி ரூபாய்     பணத்தை கடனாக பெற்று நூதன மோசடி செய்துவிட்டதால்   விவசாயிகள் புதிதாக கடன் வாங்க வழியில்லாமல் முடங்கி கிடப்பதாகவும்,   

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 80 கோடி ரூபாய் நிலுவைத் தொகையையும் வழங்காமல் ஆலையை மூடிவிட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்  சர்க்கரை ஆலையின் புதிய நிர்வாகிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து,

புதிய ஆலை நிர்வாகத்தினர் நிலுவைத் தொகையையும்,  வங்கிகளில் அடமானத்தில் உள்ள  விவசாயிகளின் பத்திரங்களையும் மீட்டுத் தந்துவிடுவதாகவும் அதற்க்காக விவசாயிகள் தரப்பினரின் குழுவை அமைத்து பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று கூறியதையடுத்து கரும்பு விவசாயிகளின் 5 ஆண்ட  பிரச்னை முடிவிற்கு வந்ததது கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *