காப்பகத்தில் உயிரிழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் முதலைமைச்சர் அதிரடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா சேவாலாயம் காப்பகத்தில் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

நேற்று முன்தினம் இரவு ரச சாதம் சாப்பிட்ட குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர். நேற்று காலை காப்பகத்தின் ஊழியர்கள் சென்று பார்த்தபோது இரண்டு சிறுவர்கள் காப்பக வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள சிறுவர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் மேலும் ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்துள்ளனர். 

மூன்று சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் . தமிழக அரசு சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது . மேலும் சமூகநலத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. 

இந்த நிலையில் உயிரிழந்த, பாபு, மாதேஸ், அத்திஸ் ஆகிய மூன்று மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *