பனங்காட்டு படை தலைவர் ராக்கெட் ராஜா கொலை வழக்கில் கைது

பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கொலை வழக்கில் நெல்லை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தில் சாமிதுரை கொலை வழக்கில் இவர் 11 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இன்று கைது செய்யப்பட்டார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.

கடந்த 29.07.2022-ம் தேதி நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த முத்து என்பவரின் மகன் சாமித்துரை(26) என்பவர் முன்விரோதம்  காரணமாக கொலை செய்யப்பட்டார். மேற்படி கொலைசம்பவம் குறித்து  நாங்குநேரி போலீசார்  விசாரணை மேற்கொண்டு  வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான நடுநந்தன்குளத்தைச் சேர்ந்த விக்டர்(23), கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன் (23), தச்சநல்லூர், தாராபுரத்தை சேர்ந்த சஞ்ஜிவ்ராஜ்(25), ஶ்ரீராம்குமார் (21), ஆனந்த்(21), ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி சேர்ந்த ராஜசேகரன்(30), வடக்கு தாழையூத்தை சேர்ந்த பிரவீன் ராஜ் (30), கோவில்பட்டி சேர்ந்த ராஜ்பாபு(30), தூத்துக்குடி,  எட்டையபுரம் சேர்ந்த ஆனந்தராஜ்(24) மற்றும் ஜேக்கப் ஆகிய10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி வழக்கில் முக்கிய எதிரியான திசையன்விளை, ஆனைகுடியை சேர்ந்த ஆறுமுகப் பாண்டியன் என்ற பால விவேகானந்தன்  என்ற ராக்கேட் ராஜா- வை நாங்குநேரி போலீசார் தேடிவந்த நிலையில், இன்று நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் .ரஜத்.R. சதூர்வேதி இ.கா.ப, அவர்கள் மற்றும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்.

ஆனந்தராஜ் அவர்கள்  தலைமையிலான போலீசார் மற்றும்  மாவட்ட  தனிப்படை காவல்துறையினர்  இணைந்து தலைமறைவாக இருந்து வந்த எதிரி ராக்கெட் ராஜாவை   இன்று திருவனந்தபுரத்தில் வைத்து கைது   செய்தனர். மேற்படி எதிரிக்கு 3 கொலை  வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா நாங்குநேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *