காப்பக குழந்தைகள் 3 பேர் உயிரிழப்பு, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி

காப்பக குழந்தைகள் 3 பேர் உயிரிழப்பு விவகாரம், தமிழக அரசின் சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் விசாரணை கமிட்டி நியமனம். விசாரணை இன்று தொடங்குகிறார்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவலாயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை இயக்குனரகம் சார்பிலும், திருப்பூர் மாவட்ட வருவாய் துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுமம் சார்பிலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று விசாரணை துவங்க உள்ளது. 

இதனிடையே காப்பக குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியானது இன்று தனது விசாரணையை துவங்க உள்ளது, எதனால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

இந்த உயிரிழப்பை தவிர்க்க என்னென்ன செய்திருக்கலாம். அந்த காப்பகத்தில் உள்ள அடிப்படை கட்டமைப்புகள் என்னென்ன என்பது குறித்து இந்த கமிட்டி விசாரணை மேற்கொள்ள உள்ளது. மேலும் சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் இன்று காலை சம்பவம் நடந்த விவேகானந்தா சேவாலய காப்பகத்தில் ஆய்வு செய்ய உள்ளார், அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை பார்வையிட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *