’எங்களை காப்பாற்றுங்கள்’ உணவு இல்லாமல் குவைத்தில் சிக்கி தவிக்கும் 38 தமிழக இளைஞர்கள் கதறல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியைச் சேர்ந்த இளைஞர் உள்ளிட்ட குவைத் நாட்டில் வேலைக்குச் சென்று வேலையில்லாமலும் உண்ண உணவு கூட இல்லாமல் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 38 இளைஞர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் தனது மகனை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என பிலாவிடுதியைச் சேர்ந்த இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிலாவிடுதி சாஞ்சாடி தெருவை சேர்ந்த விவசாயி தியாகராஜன்.‌ இவரது மகன் தமிழ்செல்வன். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி குவைத் நாட்டில் பணிக்கு தனியார் ஏஜென்ட் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இவர் குடும்ப வறுமையை போக்க வெளிநாட்டுக்கு சென்று பணி செய்வதாக கூறியதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் தெரிந்த நபர்களிடம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்று இவரை வெளிநாடு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த தனியான ஏஜென்ட் மூலம் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 38 நபர்கள் குவைத் நாட்டுக்கு சென்றனர். 

இந்நிலையில் தங்களுக்கு உறிய வேலையும் இல்லை உணவும் இல்லை தங்களை மீட்க ஒன்றிய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குவைத்தில் சிக்கி உள்ள 38 நபர்கள் பெற்றோர்கள் மூலமாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு தங்களை காப்பாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குவைத்தில் சிக்கியுள்ள தனது மகன் உள்ளிட்ட இளைஞர்களை மீட்க கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவை சந்தித்து தமிழ்செல்வனின் தந்தை தியாகராஜன் மனு கொடுத்துள்ளார்.

மேலும் தனது மகனை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலையில்லாமல் உணவு கூட கொடுக்காமல் தனது மகன் உள்ளிட்ட 38 இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனால் அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டும் என கண்ணீர் மல்க தமிழ்செல்வனின் தந்தை தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *