அட்வான்ஸை திருப்பி தராமல் கடையை அடித்து நொறுக்கிய ஓனரை கைது செய்ய டிஎஸ்பியிடம் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வாடகைக்கு விடப்பட்ட கடையிலிருந்து ₹ 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சூறையாடப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி வணிகர் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டைமண்ட் ராஜா வெள்ளையன் டிஎஸ்பியிடம் புகார் மனு.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி சாலையில் சிவப்பிரகாசம் என்போருக்கு சொந்தமான கே எஸ் ஜி வணிக வளாகம் உள்ளது. அதில் அதே பகுதி சேர்ந்த சிவ கருணாகரன் என்பவர் வணிக வளாகத்தில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாக டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். 

இதனிடையே கட்டிடத்தின் உரிமையாளர் சிவப்பிரகாசம் கடையின் வாடகையை அண்மையில் உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் வாடகை செலுத்த முடியாத நிலையில் சிவா கருணாகரன் கடையை காலி செய்து தருவதாக கூறியுள்ளார். 

அதன்படி கடையை காலி செய்த நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் சிவ கருணாகரனுக்கு அட்வான்ஸாக பெறப்பட்ட ரூபாய் 25 லட்சம் திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடையை பூட்டி வைத்திருந்த சிவ கருணாகரன் அட்வான்ஸ் பணத்தை திருப்பி தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் கடை கட்டிடத்தின் உரிமையாளர் சிவப்பிரகாசம் பத்துக்கும் மேற்பட்ட ஆட்களுடன் நேற்று கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை சூறையாடிக் கொண்டு சென்று விட்டதாக வாடைகைக்கு இருந்த சிவ கருணாகரன் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனிடையே இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டைமண்ட் ராஜா வெள்ளையன் இன்று பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் சிவ கருணாகரனுக்கு சொந்தமான கடையை பூட்டை உடைத்து அதில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளது. 

அட்வான்ஸ் தொகையை திருப்பி தராமல் அடியாட்களை வைத்து மிரட்டி வருவதாகவும் இதனால் வணிகர்கள் பெரும் பாதிக்கப்படுவதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *