முதல் தற்கொலை படை போராளி குயிலியின் 242-ஆவது நினைவுதினம்

குயிலியின் 242வது நினைவுதினம். சமுதாய மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி. சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வீரத்தாய் குயிலியின் 242 வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில் சமூக மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இழந்த மண்ணை மீட்டெடுக்க வீர மங்கை வேலுநாச்சியர் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டபோது இறுதியாக வெற்றியடைய வெள்ளையர்களின் ஆயுத கிடங்கில் தற்கொலை படையாக குயிலி தாக்குதல் நடத்த திட்டமிட்டு விஜய தசமி நாளில்  வெற்றியடைய செய்த வீரத்தாய் குயிலியின் 242வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. 

சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியர், குயிலி நினைவு மண்டபத்தில் அவர்களது நினைவு தூனிற்கு சமூதாய அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னதாக சிவகங்கை அரண்மனை சார்பில் இளைய மன்னர் மகேஸ் துரை, முதல் மரியாதையை செய்தார். 

பின்னர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் (அதிமுக) மற்றும் ஏராளமான சமுதாய மக்கள் பங்கேற்று மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…