15 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட நிதி நிறுவன ஊழியரின் உடல் மீட்பு

நண்பன் மனைவியுடன் தகாத உறவு காரணமாக கொலை செய்யப்பட்ட கம்பம் தனியார் நிதி நிறுவன ஊழியர் உடல் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப்பெரியாற்றில் காவல் மற்றும் தீயணைப்புதுறையினரால மீட்பு. முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திறப்பை நிறுத்தியை தொடர்ந்து 15 தினங்களுக்கு பிறகு சடலம் மீட்கப்பட்டுள்ளது.  

கம்பம் கூலத்தேவர் முக்கினை சேர்ந்தவர் பிரகாஷ், இவர் தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி கனிமொழி கடந்த செப் 21ஆம் தேதி தன் கணவனை காணவில்லை என்று கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் மேன் மிஸ்சிங் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பிரகாஷ்  செல்போனை சோதனை செய்ததில் ஒரே நம்பரில் பல நூற்றுக்கணக்கான தடவை போன் உரையாடல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் ஆய்வு செய்ததில் பிரகாஷ்  செல்போனுடன் தொடர்பு இருந்த நபர் கம்பம் கூலத்தேவர்முக்கிற்கு அருகிலுள்ள என். கே. பி ராஜு கவுண்டர் தெருவை சேர்ந்த வித்தியா என்பது தெரியவந்தது.

போலீஸ்சார் வித்தியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது வித்தியாவின் கணவர் வினோத்குமார் ஆட்டோ ஓட்டுபவர் இவரும் பிரகாஷ்ம் நண்பர்களாம் நண்பர் என்ற முறையில் வினோத்குமார் வீட்டிற்கு அடிக்கடி வந்த பிரகாஷ்  வினோத்குமாரின் மனைவி வித்தியாவுடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

இந்த கள்ளத்தொடர்பு வினோத்குமார் தெரியவந்ததை தொடர்ந்து மனைவியையும் தனது நண்பர் பிரகாஷையும் ஒருவருடத்திற்கு முன்பு கண்டித்துள்ளார்.

இருவரும் பிரிந்து இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் வித்தியாவிற்கும் பிரகாசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரகாஷ் வித்யாவின் ரகசிய படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதை கண்ட வினோத்குமார் தன் மனைவியிடம் மீண்டும் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட படத்தினை பிரகாஷ் அளித்து விட்டதாவும் இதில் விரக்தி அடைந்த வித்தியாவும் அவரது கணவர் வினோத்குமாரும் பிரகாஷை பழிவாங்கும் எண்ணத்திற்கு உள்ளானதாகவும், இதனால் வித்யா பிரகாஷ் உடன் இருந்த தொடர்பினை தவிர்ந்து கொள்ளாமல் தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி பிரகாஷ் வினோத்குமார் இருவரும் மது அருந்தி உள்ளனர். மது அருந்திய  வினோத்குமார் சுயநினைவு இல்லாத நிலைக்கு சென்று விட்டார் என்றும் அதனால் தன்னுடன் சந்தோஷமாக இருக்க வித்தியா பிரகாஷ்யை அழைத்ததாகவும், வீட்டிற்கு வந்த பிரகாசை வீட்டுக்குள் வந்தவுடன் கதவை தாழிட்டுக் கொண்ட வித்தியா தனுடன் நெருக்கமாக இருப்பது போன்று காண்பித்துக் கொண்டுள்ளார். 

இதைக் கண்ட வினோத்குமார் பிரகாஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி வாங்கி வைத்திருந்த கயிற்றால் பிரகாஷின் கழுத்தில் கணவன் மனைவி இருவரும் போட்டு கழுத்தை நெருக்கி கொலை செய்ததாகவும், பின்னர் இறந்த பிரகாஷின் உடலை  வினோத்குமார் தனது ஆட்டோ டிரைவர்  நண்பன் ரமேஷ் உதவியுடன் வினோத்குமார் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வினோத் குமார் ஆட்டோவினை ஒட்ட மனைவி வித்தியா பிரகாஷ் உடலை பின் இருக்கையில் தாங்கியவாறு சென்று இரவு 2 மணிக்கு உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் சடலத்தை வீசிவிட்டு வீட்டுக்கு திரும்பியதாக  போலீசார் விசாரணையில் வித்தியா, வினோத்குமார் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

அவர்கள் அளித்த தகவலின் பெயரில் போலீசார் தீயணைப்பு துறையினர் உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் முல்லைப் பெரியாற்றில் பிரகாஷ் உடலை கடந்த செப் 22 முதல் தீவிரமாக தேடி தொடங்கினர்.

இந்த நிலையில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸ்சார் மேன் மிஸ்ஸிங் வழக்கினை வினோத்குமார் வித்யாவின் வாக்குமூலம் படி கொலை வழக்காக மாற்றி வினோத்குமார், வித்தியா, ரமேஷ் ஆகிய மூவர் மீதும் பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.

ஆற்றில் வீசப்பட்ட பிரகாஷின் உடலை கடந்த செப்டம்பர் 22 முதல் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் தேடி வந்தனர். 15 நாட்கள் ஆகியும் ஆற்றில் பிரகாஷ் உடல் கிடைக்கவில்லை. மேலும் முல்லைப் பெரியாற்றில் அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால் சடலத்தை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

 இதனை தொடர்ந்து காவல்துறை மற்றும் இறந்த பிரகாஷின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மாவட்ட ஆட்சியர் இன்று அக் 05 காலை முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திறப்பதை நிறுத்திட உத்தரவிட்டர்.

அதனை தொடர்ந்து ஆற்றில் வீசப்பட்ட பிரகாஷின் உடலை காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடும்படியில். ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பகுதி முல்லைப் பெரியாற்றில் பிரகாஷின் உடலை காவல் துறை மற்றும் துறை மீட்டியுள்ளனர்.

 முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதை தொடர்ந்து 15 நாட்களாக தேடப்பட்ட பிரகாஷ் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…