கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பலி.

ஒசூர் அடுத்த கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(35) இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்..

காமன்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிரானைட் தொழிற்சாலை கழிவுகளை டிராக்டர் மூலம் எடுத்து செல்லும் வேலையை நாகராஜ் மேற்க்கொண்டு வந்தநிலையில் 

இன்று தாசனபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கிரானைட்ஸ் தொழிற்சாலையில் டிராக்டரை ஓட்டி சென்று, கிரானைட் கல் உள்ள பகுதியில் நின்றபோது எதிர்பாராத விதமாக கிரானைட் கல் அறுக்க பயன்படும் பிளேடு அறுந்து விழுந்து நாகராஜ் மார்பு பகுதியில் கிழித்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

உயிரிழந்த நாகராஜிற்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், நாகராஜனின் உடலை பார்த்து மனைவி, பெற்றோர் அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியது..

உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது

ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபின்பு உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *