பேச்சுவார்த்தை தோல்வி, டோல்கேட் ஓபன், அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு

பெரம்பலூர் அருகே ஊழியர்களின் போராட்டத்தால் கடந்த மூன்று நாட்களாக முடங்கி இருந்த திருமாந்துறை சுங்கச்சாவடி மீண்டும் இயக்கம். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கருதி போலீஸார் குவிப்பு.

மீண்டும் பணி வழங்காவிடில் 13 ஆண்டு பணிபுரிந்த தங்களுக்குரிய பணப்பயனை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததின்பேரில் 3 நாட்களுக்கு பிறகு சுங்கச்சாவடிகளில் fast Tag-கட்டண செயலியை இயக்க ஊழியர்கள் ஒப்புதல். தொடர் வருவாய் இழப்பை தடுக்க  பணியாளர் இன்றி Fast Tag செயலிமட்டும்  செயல்பட்டு வருவதால் திருமாந்துறை சுங்கச்சாவடியில் வழக்கம்போல் 90% விழுக்காடு வாகனங்கள்  கட்டணம் செலுத்தி பயணிக்கின்றன.

திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த கோரி அனைத்து ஊழியர்களும் கடந்த 01. – ஆம் தேதி முதல்தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் பிரச்சனைக்கு சுமூக தீர்வுகாண நேற்று மாண்டிக்சேரியில் மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் ரமேஷ்குமார் முன்னிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற முத்தரப்ப பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை புதன்கிழமைக்கு(5.10.22) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சுங்கசாவடி முடக்கத்தால் 3 கோடி ரூபாய்க்கு மேல்வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சுங்கசாவடியை இயக்க ஒன்றிய அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா போராடிவரும் சுங்கசாவடிஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேசியதையடுத்து இன்று முற்பகல் முதல் சுங்கசாவடியை இயக்க ஊழியர்கள் அனுமதியளித்து சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து சுங்கசாவடி அறைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் fast Tag – கட்டண சேவை தொடர்கிறது.

இதனிடையே இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது அரசின் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்றுள்ளோம். ஆனால் எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். நாளை நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க ஒப்புதல் தராவிடில். 

அடுத்தகட்டமாக 13 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள ஊழியர்களுக்கு உரிய பணப்பயனை சுங்கச்சாவடி நிர்வாகத்திடமிருந்து பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும். அதற்காக ஊழியர்கள் சுங்கசாவடி நிர்வாகத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததால்தான் நாங்கள் சுங்கச்சாவடி இயக்கு ஒப்புதல் தந்துள்ளோம் என்று தெரிவித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *