டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

chennai high court

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சுங்கச்சாவடி நிர்வாகம் (TTPL) சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று கொடுத்த  வழக்கை அவசர வழக்காக இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 

நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் ஊழியர் தங்களது போராட்டத்தை தொடரலாம் சுங்கசாவடி நிர்வாகம் மற்றும் போராட்டத்திலுள்ள ஊழியர்கள்  இரு தரப்பினருக்கும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் இந்து கருணாகரன் மற்றும் சுங்கப் பணியாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் உமாசங்கர், பாலன் ஹரிதாஸ் ஆகிய வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணையில் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிசண்முகம் இதே போல கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோருடன் உயர்நீதிமன்ற நீதிபதி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று, வரும் 10 ஆம் தேதி வரை இதே நிலையை தொடர உத்தரவிட்டதுடன். 

இரு தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *