தொழில்நுட்ப கோளாறால் டோல்கேட்டில் ஊழியர்களுக்கும் ஓட்டுநர்களுக்குமிடையே கைகலப்பால் பரபரப்பு

சர்வர் வேகம் குறைந்ததாலும், ஸ்கேனிங் செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் மின்னனு சாதனத்தாலும் சுங்கச்சாவடியை கடக்க வாகனம் நீண்ட நேரம் ஆவதால் ஊழியர்கள், பயணிகள் இடையே வாக்குவாதத்துடன் கைகலப்பு நேரிடும் நிலை இருந்து வருவதாக ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இதில் தினமும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன. இவ்வாறாக பயணிக்கும் வாகனத்தை வரைமுறைப்படுத்த பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் ரொக்கப் பரிவர்த்தனை குறைக்கப்பட்டு மின்னணு பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்தது இந்த நிலையில் தற்போது இதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை செல்லும் நிலை தற்போது தொடர்கிறது. இது குறித்து பேசிய ஊழியர்கள் மின்னனு ஸ்கேனிங் செய்யும் முறை என்பது சர்வர் மூலம் இயக்கப்பட்டு வருவதாகவும் அந்த சர்வரை ஒழுங்காக நிர்வாகம் பராமரிக்கவில்லை என்றும், 

இதனால் ஒவ்வொரு வாகனமும் சுங்கச்சாவடியை கடப்பதற்கு காலதாமதம் ஆவதால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதை நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்கின்றனர். இதில் நிர்வாகம் கவனம் செலுத்தி உடனடியாக சரி செய்யாத பட்சத்தில் ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி பெரும் ஆபத்து நிலையை உருவாக்கி விடும் என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…