வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த சேராங்கல் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில்  கடந்த ஆகஸ்ட் மாதம்  4 வயதுடைய ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்திருந்தது.

சிறுத்தை உயிரிழந்த விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள விவசாயி மோகன் பாபு (வயது 40) என்பவர் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள சுமார் 200 மீட்டருக்கு சைரன் ஒலி எழுப்பும் கருவி வைத்துள்ளார் இதனால் பாதிக்கப்பட்டு சிறுத்தை உயிரிழந்ததாக 1972 வன உயிரிகள் சட்டத்தின் கீழ் மோகன்பாபுவை கைது செய்த பேரணாம்பட்டு வனத்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

ஒலி எழுப்பும் கருவியின் மூலமாக சிறுத்தை உயிர் இழக்க வில்லை எனவும் பொய் வழக்கு போட்ட வனத்துறை என்பது நடவடிக்கை எடுக்க வேண்டும் , கைது செய்யப்பட்ட விவசாய மோகன் கோவை விடுவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இன்று வேலூர் மண்டல வன காவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள நபர்களின் மீதுள்ள வழக்கை எவ்வித நிபந்தனை மின்ற ரத்து செய்ய வேண்டும் பொய் வழக்கை பதிவு செய்த அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு 5 லட்சம் ரூபாயும் உயிர் சேதத்திற்கு 20 லட்சம் ரூபாயும் வழங்குவதோடு பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்

விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றி மான் மயில் ஆகியவற்றை விவசாயிகளை அழிக்க அனுமதிக்க வேண்டும் வனவிலங்குகள் விளைநிலங்களில் புகாத வண்ணம் வன எல்லை முழுவதும் சூரிய மின் வேலி அமைப்பதோடு அகழிகளையும் உடனடியாக அமைக்க வேண்டும்

வனவிலங்குகளை விவசாய விளை நிலங்களில் இருந்து எத்தகைய நெறிமுறையை பின்பற்றி விரட்டுவது என்று வனத்துறையினர் தெளிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…