அடிதூள்: சாலை வேண்டி 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய பெண் ஊராட்சி தலைவர்

கிருஷ்ணகிரி அருகே கட்டிக்கானபள்ளி ஊராட்சியில் பொதுமக்களின் 20 ஆண்டுகால கோரிக்கை – 98 லட்சத்தில் 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு மிக அருகாமையில் அதிகளவில் மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக கட்டிக்கான பள்ளி ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி விநாயகர் கோவில் முதல் துருஞ்சிப்பட்டி சாலை வரையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டு குழியுமாக  சாலைகள் இருந்தது இதனை தார்சாலையாக அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை அடுத்து கட்டிக்கானபள்ளி ஊராட்சி சார்பில் 98 லட்சத்தில் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற பூமி பூஜையில் அப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு புதிய சாலை அமைப்பிற்கான பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

இதனால் கடந்த 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில்  ஊராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த பூமி பூஜை யில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஊராட்சி செயலாளர் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…