H1- N1 காய்ச்சலுக்கு 1500 சிறப்பு முகாம்கள் ரெடி, அமைச்சர் மா.சு

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில். H1- N1 காய்ச்சல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை கண்டறிய,   நாள் ஒன்றுக்கு  1500  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், காய்ச்சல் உள்ளவர்கள் மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது , முகக்கவசம் அணிவது சிறந்த தீர்வாக இருக்கும் என தஞ்சையில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம்,

தஞ்சை மருத்துவக் கல்வி மருத்துவமனை மனையில்,  மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்                       மா .சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இருவரும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தனர். 

ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரம், அதி நவீன எக்ஸ்ரே கருவி, சிறுவர்களுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா, மற்றும் தமிழகத்திலேயே முதல்முறையாக நீரழிவு நோயாளிகளுக்கான இரத்த நாள அறுவை சிகிச்சை துறை சார்பில் பாத மருத்துவ மையம், மருத்துவமனையிலேயே தயாரிக்கப்பட்ட செயற்க்கை கால்கள் பயனாளிகளுக்கு வழங்குதல் என 4.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கிவைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு துறைகளில் மாநில அளவில் சாதனை புரிந்த மருத்துவர்களுக்கு தங்க பதக்கங்களை வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழ்நாட்டில் H1- NI வைரஸ் காய்ச்சல், மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க இந்தியாவில் வேறு எங்கும்  இல்லாத வகையில் நாள் ஒன்றுக்கு 1500 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை1428 முகாம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தவர்,  H1-N1 வகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 17 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தவர்.

பருவ கால மாற்றத்தின் காரணமாக ஏற்படும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மூன்று நாட்கள் தனிமைபடுத்திக் கொள்வதே சிறந்த தீர்வாக அமையும் என்றவர்,  கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு20முதல்  40 பேர் வரை உயிரிழப்பு ஏற்படும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 6 மாதமாக ஒரு உயிரிழப்புக்கூட இல்லை ,இதற்க்கு காரணம் தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்றியதுதான் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *