செல்போன் டவரை காட்டி 14 லட்சத்தை ஆன்லைனில் ஆட்டயபோட்ட சைபர் ஆசாமிகள் 

ஒசூர் அருகே குறுந்தகவலால் ஏமாற்றமடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியர், ரூ14 லட்சம் 26 ஆயிரம் அபேஸ் சைபர் கிரைம் போலீஸில் புகார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.14 லட்சத்து 26ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகள் இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார், மர்ம ஆசாமிகள் சிக்குவார்களா போலீஸில்,

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துகோட்டை பகுதியை சேர்ந்தவர் நாகபூஷன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். கடந்த 23.6.2022 அன்று இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் தனியார் செல்போன் டவர் (ஏர்டெல்) அமைக்க இடம் கொடுத்தால் ரூ 80 லட்சம் அட்வான்ஸ் ஆக கொடுக்கப்படும் மாதந்தோறும் ரூ 45 ஆயிரம் வாடகை தொகை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு நாகபூஷன் பேசினார். அப்போது பாம்பே அலுவலகத்திலிருந்து பேசுகிறேன் என தெரிவித்து அவர்கள் செல்போன் டவர் அமைப்பதற்காக சில நடைமுறைகள் உள்ளது என தெரிவித்துள்ளனர்,இதற்கு சொத்து யார் பெயரில் உள்ளது அவருடைய ஆதார் கார்டு பான் கார்டு வங்கி கணக்கு ஆகியவை தருமாறு கேட்டுள்ளனர்,இதற்கு ஆசிரியரும் அவருடைய மனைவி பார்வத பெயரில் உள்ள சிட்டா நகல் மற்றும் ஆவணங்களையும் அனுப்பி உள்ளார்

இதையடுத்த மற்றொருவர் தொடர்பு கொண்டு உங்களுக்கு டவர் அமைப்பதற்கு ஆர்டர் ஆகியுள்ளது என தெரிவித்து ரூபாய் 12000 செலவாகிறது ஆனால் அதற்கு நீங்கள் 6000 மட்டும் அனுப்பினால் போதும் என தெரிவித்துள்ளார் இதை நம்பி அவரும் முதல் தவணையாக ரூபாய் 6 ஆயிரம் அனுப்பி உள்ளார்

இதேபோல அடுத்தடுத்து வெவ்வேறு செல் நெம்பர்களில் இருந்து மர்ம ஆசாமிகள் தொடர்பு கொண்டு தங்களுக்கு மெட்டீரியல் தயாராக உள்ளது இதை நாங்கள் மூன்று லாரிகளில் எடுத்து வருகிறோம் இதற்கு உண்டான செலவு தொகையை, மற்றும் பிளைட்டில் வருவதற்கு உடனடியாக ரூ 2 லட்சத்து 80 ஆயிரம் வங்கியில் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்

இதே போல் அவர்கள் கூறியபடி 3 வங்கிகளின் கணக்கிற்கு பல தவணைகளாக பணம் அனுப்பி உள்ளார்,மேலும் போன் பே மூலம் பணம் செலுத்தி உள்ளார் இது போல் மூன்று நாட்களக்கு முன் வரை ரூ.14 லட்சத்து 26 ஆயிரத்தை நாகபூஷன் அனுப்பி உள்ளார்

தொடர்ந்து சீனிவாசன், பாண்டியன் பேசுகிறேன் விஜயகுமார் வங்கியில் இருந்து பேசுகிறேன் இவ்வாறு மாற்றி மாற்றி பேசி ஆசிரியரை தன் வலையதுக்குள் சிக்குவைத்த மர்ம சாமிகள் லட்சக்கணக்கில் ஆட்டையை போட்டுள்ளனர், ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர் செய்வதறியாமல் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சைபர்கிரையில் புகார் அளித்தார்

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார், குறுந்தகல்களை ஏமாற வேண்டாம் என செய்தித்தாள்கள் மற்றும் டிவிகளில் விளம்பரம் வந்தால் கூட படித்தவர்களே இது போல் ஏமாற்றம் அடைந்துள்ளது லட்சக்கணக்கில் பணம் கிடைக்கிறதே என்ற பேராசை தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *