பெட்ரோல் குண்டு வீசிய இருவர் குண்டாஸில் கைது, ஆட்சியர் அதிரடி! 

திண்டிவனத்தில் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக வீடு மற்றும் கடையில் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசிய வழக்கில்  இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திண்டிவனத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்கிற பிரவீன் வ/ 29, ராஜ்குமார் என்கிற மணிமாறன் வ/32, ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கண்ட பிரவீன்குமார் மற்றும் ராஜ்குமார் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த 28.08.2022 அன்று ரோஷணை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தனது வீடு மற்றும் கடையில் முன் விரோதம் காரணமாக மேற்கண்ட எதிரிகள் இருவரும் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் குண்டு தன் கடை மற்றும் வீட்டின் பகுதியில் வீசிவிட்டு சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்த நிலையில் இன்று இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுதந்திர தினத்துக்குள் அத்திக்கடவு திட்டம் பயன்பாட்டிற்கு வரும்… முதல்வர் உறுதி 

ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…

செல்போனில் செலவிடும் பாதி நேரத்தை அறிவியல் செய்முறைகளை பார்க்கவும்… பள்ளி குழந்தைகளுக்கு எம்பி கனிமொழி வேண்டுகோள்

பெற்றோரிடமிருந்து செல்போனை பிடுங்கி இணையதளம் பார்க்கும் போது அறிவியல் செய்முறைகளை அதிகம் பார்க்க…