இனி திருமணமாகாத பெண்களும் இதைச் செய்யலாம் – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

யாருக்கும் எந்த சூழலிலும் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருக்கலைப்பு என்பது யார், எப்போது செய்யலாம் என்பது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில்

திருமணமான அல்லது திருமணமாகாத அனைத்துப் பெண்களும் 20-14 வாரங்களுக்குள் கருவைக் கலைக்க உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவது கற்பழிப்பு வடிவத்தை எடுக்கலாம் என்றும், கருக்கலைப்புக்கான நோக்கங்களுக்காக எம்டிபி சட்டம் மற்றும் விதிகளின் கீழ் திருமண பாலியல் வன்கொடுமை என்பதை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கணவனால் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் மூலமாக உருவாகும் கருவை அனுமதி இருக்கிறதா?, பாலியல் வன்கொடுமை மூலமாக உருவாகும் கரு, வயிற்றில் வளரும் கருவுக்கு பாதிப்பு இருப்பது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றால் என்ன செய்ய வேண்டும் போன்ற பல வகையான கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

“பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் தடுக்கக்கூடியவை. மனநலம் பற்றிய நமது புரிதல் பொதுவான பேச்சு வார்த்தையில் பரிசீலிக்கப்பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணின் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணத்தில் கூட பெண்ணின் சம்மதம் இல்லாமல் கணவனால் கர்ப்பம் அடைவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ஒவ்வொரு பெண்ணும் தனது பொருளாதார சூழ்நிலையைக் கொண்டு முடிவெடுப்பது தனிச்சிறப்பாகும் எனத் தெரிவித்தார். பல்வேறு பொருளாதார, கலாச்சார அல்லது சமூக காரணிகள் ஒரு பங்கை வகிக்கின்றன. திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் என இந்த விஷயத்தில் பிரித்து பார்க்க முடியாது என தெரிவித்த நீதிபதி, பெண்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *