’ணி இல்லை ணீ’ எழுத்துப் பிழையுடன் பிரபல பல்கலைக்கழகம், மாற்றக்கோரி மனு!

“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்” (Manonmaniam Sundharanar University) என்று எழுத்துப் பிழையுடன் உள்ள பெயரை “மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்” (Manonmaneeyam Sundharanaar University) என சரி செய்து மாற்றி வைக்க கோரி வழக்கு.

தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகியோர் மனுதாரரின் மனுவை 6 வாரத்திற்குள் பரிசீலினை செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திருப்பூரை சேர்ந்த முத்து சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைகிளைகள் தாக்கல் செய்த பொது நல மனு. அதில், “ஆசிரியர் பி.சுந்தரம்  அவர்கள் மனோன்மணீயம் என்ற நாடகம் மற்றும் நமது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடியவர். இவரின் நினைவாக “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்” (Manonmaniam Sundharanar University) 1990-ல் உருவாக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் பிழை உள்ளது. அனைத்து அரசு புத்தகத்திலும் மற்றும் பி.சுந்தரம் பிள்ளை இயற்றிய நாடகத்தின் பெயரும் மனோன்மணீயம் (Manonmaneeyam) என்று உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எனது மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்” (Manonmaniam Sundharanar University) என்று எழுத்துப் பிழையுடன் உள்ள பெயரை “மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்” (Manonmaneeyam Sundharanaar University) என சரி செய்து மாற்றி வைக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகியோர் மனுதாரரின் மனுவை 6 வாரத்திற்குள் பரிசீலினை செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *