‘எல்லோரும் சமம், யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது’ திருவிழா நடத்த நீதிபதி உத்தரவு

Madurai High Court

நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. திருவிழாவில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது ஜாதி மத பாகுபாடின்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட வேண்டும் – நீதிபதி உத்தரவு.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார் அதில் “சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் நனாமடை  கிராமத்தில் உள்ள நவநீத கோபால கிருஷ்ண கோவில் எங்களது முன்னோர்களால் நிறுவப்பட்டு அவர்களின் வாரிசுகள் தற்போது வரை நிர்வகித்து வருகிறோம் கோவிலின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பிறகு வருஷாபிஷேகம் கோவிலுக்கு நடத்தப்படுவது வழக்கம் 

அதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் ஊர் பொதுமக்களால் இணைந்து நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து வருஷாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம் எங்கள் பகுதியில் இரு வெவ்வேறு சமூகத்தினர் கிடையே பொது கோவிலில் விழா நடத்துவது தொடர்பான ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கு முடியும் வரை எங்களது கிராமத்தில் எந்த திருவிழாவும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது 

எங்கள் கோவிலில் வர்ஷாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடக்கையும் இல்லை எனவே உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார் இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயர் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி

கிராம மக்கள் அனைவருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பின்வரும் நிபந்தனைகளை பின்பற்றிய வருஷாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்

*கோவில் உரிமையாளர் உட்பட யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது

*கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு யாரையும் தடுக்கக்கூடாது

*கோவில் தேரை கயிறு இழுப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க வேண்டும்

*கோவிலுக்கு வரும் அனைவருக்கும் ஜாதி மத பாகுபாடின்றி அன்னதானம் வழங்கப்பட வேண்டும்

*எந்த விதமான கலை நிகழ்ச்சிகளும் இருக்கக் கூடாது 

என தெரிவித்து திருவிழா நடத்தியது தொடர்பான அறிக்கையை 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *