முன்னாள் டிஜிபி திலகவதி மற்றும் மகன் மீது வரதட்சணை, வன்கொடுமை வழக்கு போட்ட மருமகள்

தமிழக முன்னாள்  டிஜிபி திலகவதி அவர்களின்  மருமகள் ஸ்ருதி ,  கணவர் மற்றும் மாமியார் திலகவதி மீது சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார், தனது கணவரான திலகவதியின் மகன் டாக்டர். பிரபு திலக்,  பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து கொடுமைப்படுத்தி விரட்டியதாக  கண்ணீர் மல்க  புகார்,

தன்னுடைய 170 சவரன் நகை மற்றும் தனது தந்தை கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை பிடுங்கிக் கொண்டு விரட்டி அடித்ததால்,  தனது இரண்டு குழந்தைகளுடன் சேலத்தில் தந்தை வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக வேதனை.

தமிழக முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் டாக்டர். பிரபு திலக். இவர் சேலம் பிருந்தாவன் சாலையில் வசிக்கும் தொழில் அதிபர் கண்ணுசாமி என்பவரின் மகள் ஸ்ருதி-யை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த நிலையில்  இன்று ஸ்ருதி  தனது தந்தை கண்ணுசாமியுடன் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தார். தனக்கும் தமிழக முன்னாள் டிஜிபி திலகவதி அவர்களின் மகன் டாக்டர்.பிரபுதிலக்-கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம்  நடந்தது. 

தற்போது தங்கள் இருவருக்கும் 14 வயதில் ஒரு பெண் குழந்தையும்,  ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும்  உள்ளனர். திருமணத்தின்போது சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் தனது கணவர் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி வந்தார். ஆரம்ப முதலே அவருடைய  நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. இதனால்  இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. 

எனது கணவருக்கும் அவருடன் பணியாற்றி வந்த சேலத்தை சேர்ந்த பெண் மருத்துவர்  ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. அந்த பெண் டாக்டர், குடும்ப நண்பர் என்பதால் முதலில் எனக்கு தெரியவில்லை.

ஒரு நாள் அந்த பெண் மருத்துவர்,  மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.  பின்னர் நான் இரவில் தூங்கி கொண்டிருக்கும் போது,   எனது கணவரும்,  அந்த பெண் டாக்டரும் வீட்டின் மாடியில் தவறான உறவில் இருந்தனர். திடீரென எழுந்த நான்,  இதனைக் கண்டு  அதிர்ச்சி அடைந்தேன் .

இதனையடுத்து அவர்கள் இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்.  ஆனாலும் இது குறித்து நான் மாமியார் திலகவதியிடம் தெரிவித்தேன்.  அப்போது அவர் என் மகனுக்கு எது சந்தோஷமோ அதை தான் செய்வான் , நீ அனுசரித்து செல்ல வேண்டும் என்று சொல்லி மேலும் அதிர்ச்சியை ஊட்டினார். 

அதன் பின் நாங்கள் சென்னைக்கு வந்து மாமியார் திலகவதியுடன் தங்கினோம். அங்கு வேறொரு  பெண் மருத்துவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இப்படி பல பெண்களுடன் அவருக்கு  தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

 இந்நிலையில் சினிமா படம் எடுக்கிறேன் பணம் வேண்டும் என்று எனது  அப்பாவிடம் கேட்டார். எனது அப்பாவும் வீட்டை அடமானம் வைத்து ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தார். 

வால்டர் என்ற திரைப்படத்தை எடுத்து,  அந்த பணத்தை இன்னும் திருப்பி தரவில்லை. படம் தோல்வி அடைந்ததாலும் ,  ஒரு முறை கடந்த 2016ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து ஏராளமான மது பாட்டில்களை தனது காரில் வைத்து எனது கணவர் கடத்தி வந்த போது ,  அப்போது போலீசார் அவரை பிடித்து விட்டனர். இதனால் மனம் வெறுத்துப் போன அவர் மது போதைக்கு அடிமையானார். அன்று முதல் தன்னை அடித்து துன்புறுத்தி வருகிறார்.  கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தன்னை கடுமையாக தாக்கியதில் காயம் ஏற்பட்டது. 

இதுகுறித்து அப்போது சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்த போது, மாமியார் திலகவதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையே  இல்லாமல் செய்து விட்டார். மேலும் என்னிடம்  இருந்த 170 சவரன் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு சித்திரவதை செய்தனர்.  எனவே  எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் தற்போது குழந்தைகளுடன் தற்போது அப்பா வீட்டுக்கு வந்து விட்டேன். எனது உயிருக்கும் எனது குழந்தைகள் உயிருக்கும் ஆபத்து உள்ளது.  எனவே எங்களுக்கு பாதுகாப்பு கேட்டு  தற்போது சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தொடர்ந்து கூறியவர் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி (டிஜிபி ) என்பதால் மாமியார் திலகவதி , தன்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுகிறார். எனவே தனது நகை மற்றும் பணத்தை மீட்டு தருமாறு புகார் மனு வழங்கி உள்ளதாக சுருதி தெரிவித்துள்ளார். முன்னாள் டிஜிபி திலகவதி, மற்றும் அவர் மகன் டாக்டர. பிரபு திலக்  மீதும் ஸ்ருதி வரதட்சணை புகார் மற்றும் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *