மயான தகனமேடையில் இளைஞரின் வினோத உண்ணாவிரதம்,  குடியரசுத் தலைவருக்கு வைத்த கோரிக்கைகள்!

அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அறிஞர் என்பவர் மயான தகனமேடையில்  இரவிலும் உண்ணாவிரதம். 

அறந்தாங்கி அருகே எருக்கலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அறிஞர் என்பவர் இந்திய குடியரசுத் தலைவருக்கு பல்வேறு கோரிக்கைகள் 

*ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே வரி ஒரே தேர்தல் 

*விவசாயிகள் உரிமை மீட்டெடுப்பது 

*100 நாள் வேலைக்கு பயனுள்ளதாக்கி பஞ்சாயத்தில் நூறு ரூபாய் செலுத்தி ஆட்கள் கேட்கும் விவசாயிக்கு மட்டும் ஆட்களை அனுப்ப வேண்டும், முழுக்க முழுக்க விவசாயத்திற்கு மட்டும் ஒரு வருடம் முழுவதும் வழங்க வேண்டும்

*ஆதார் கார்டு குடும்ப கார்டு நகல் வைத்து 50000 முதல் 10 லட்சம் வரை கடன் பெற சட்டம் இயற்ற வேண்டும் 

தவணை சரியாக கட்டாத நபர்கள் குடும்ப அட்டையை முடக்கி வைக்க வேண்டும் 

*தள்ளுபடி இலவசம் என்ற வார்த்தையை நீக்க வேண்டும்.

*விவசாய இடுபொருள்கள் 75 சதவீதம் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்தி எருக்கலக்கோட்டை தகன மேடையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் அவரிடம் வருவாய் அதிகாரிகள் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்தது. 

இந்திய குடியரசு தலைவருக்கு மனு அனுப்புகிறேன் என்று தகனம் மேடையில் இரவிலும் உண்ணாவிரதம் இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. சு சுசிலா says:

    ஒரு கை ஓசை தராது மகனே. இன்னும் விவசாய நண்பர்கள் இணைந்து போராடலாம்