50 ஆயிரம் டாலர் இருந்தால் போதும் மலேசியாவில் தொழில் தொடங்கலாம் – மலேசிய உள்துறை அமைச்சர்

50 ஆயிரம் அமெரிக்கன் டாலர் முதலீடு செய்தால் போதும்  யார் வேண்டுமானாலும் மலேசிய நாட்டில் தொழில் தொடங்கலாம் என்றும், மலேசிய நாட்டில் வேலைக்கு செல்லும் தமிழக தொழிலாளர்களின் வயது வரம்பை 45 -லிருந்து தளர்த்தி அதிகரிக்க மலேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஹம்சாபின் ஜெய்னுதீன் தெரிவித்துள்ளார்.

மலேசிய நாட்டில்தொழிலதிபராக உள்ளவர் டத்தோ பிரகதீஸ்குமார் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்திலுள்ள இவரது இல்லத்திற்கு மலேசிய நாட்டின் உள்ளதுறை அமைச்சர் டத்தோ ஹம்சாபின் ஜெய்னுதீன்  விருந்தினராக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தான் தமிழகம் வந்துள்ளதாகவும் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மலேசிய நாட்டிற்கு வேலை தேடிச்செல்லும் தமிழக தொழிலாளர்களின் வயது வரம்பினை 45 என நிர்ணயித்துள்ளது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த வயது வரம்பை தளர்த்தி உயர்த்துவது குறித்து மலேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா பரவலுக்கு பின் மலேசிய நாட்டின் சுற்றுலாத்துறை மந்தமாகவே உள்ளது என தெரிவித்த அவர் இதை சரி செய்ய குறுகிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

50 ஆயிரம் அமெரிக்கன் டாலர் முதலீடு இருந்தால் போதும்  யார் வேண்டுமானாலும் மலேசியாவில் தொழில் தொடங்கலாம் என தெரிவத்த அவர், 20 ஆண்டுகள் மலேசியாவில் தங்க இன்வெஸ்மெண்ட் எனப்படும் பிரீமியம் விசா எடுக்க வேண்டும், அதற்கு தகுதிவாய்ந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்னச்சாமி மற்றும் தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார்ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக பூலாம்பாடி கிராமத்திற்கு வருகை தந்த மலேசிய நாட்டு உள்துறை அமைச்சர் டத்தோ ஹம்சபின் ஜெய்னுதீன் – அவர்களை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி சண்முகத்துடன் பூலாம்பாடி கிராமத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா பூங்கொத்து கொடுத்து மலேசிய அமைச்சரை வரவேற்றார். மலேசிய உள்துறைஅமைச்சரின் வருகையையொட்டி வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *