குலசேகரன்பட்டினம் தசராவில் சினிமா நட்சத்திரங்களுக்கு நிபந்தனை விதித்த நீதிபதி

திருத்செந்தூர், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சினிமா, நட்சத்திரங்கள் நடிகை, நடிகர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க கோரி வழக்கு*

சினிமா பிரபலங்கள் நடிகைகள் பங்கேற்கலாம் ஆனால் கட்டுப்பாடுகளை விரித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு ஆபாச நடனங்களோ அல்லது  ஆபாச  வார்த்தைகள் போன்றவை நிகழ்ச்சியில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட சினிமா, நடிகை , நடிகர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவு.

தசரா திருவிழாவின்போது நடைபெறும் ஆடல், பாடல், கலை, மற்ற நிகழ்ச்சிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்க கூடாது – நீதிபதிகள்

திருச்செந்தூரை சேர்ந்த ஸ்ரீ அம்பிகை தசரா குழு சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், “குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களது கலாச்சாரத்தின் படி ஆடைகள் அணிந்து விழாவில் கலந்து கொள்கின்றனர்.

குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவில் சினிமா, டிவி நடிகைகள் ஆபாச நடனமாக ஆடுவதாக கூறி அவர்களை திருவிழாவில் அனுமதிக்க கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

எனவே, திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவில் சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 

* குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின்போது சினிமா டிவி மற்றும் நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்கினார்.

* தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்க கூடாது.

* தசரா திருவிழாவின்போது நடைபெறும் ஆடல், பாடல், கலை, மற்ற நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி பெற வேண்டும்.

* தசரா திருவிழாவின்போது நடைபெறும் ஆடல், பாடல், கலை, மற்ற நிகழ்ச்சிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

* நிகழ்ச்சியின் போது ஆபாச நடனங்கள், தகாத வார்த்தைகள் உபயோகித்தால் நிகழ்ச்சியை காவல்துறையினர் நிறுத்தலாம்.

* ஆபாச நடனங்கள் தகாத வார்த்தைகள் போன்றவை நிகழ்ச்சியில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட சினிமா, டிவி, நாடக நடிகர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்வதற்கான கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *