மொபைல் மேரேஜ் ஹால்:  திருமண மண்டபம் கிடைக்கலையா கவலையை விடு..!!

உணவு டெலிவரி, இதர பொருட்கள் டெலிவரி என்கிற வரிசையில் தற்போது திருமண மண்டபமும் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. நாம் நினைத்த இடத்திற்கு அதை கொண்டு செல்ல முடியும். இதில் தோராயமாக 30-40 வரை அமர முடியும் என்பதால் மக்களின் கவனம் தற்போது இதன் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த மண்டபத்திற்கு மொபைலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் எங்கே சென்றாலும் அதை நம்மால் கொண்டு செல்ல முடியும் என்பதால் இதற்கு மொபைல் மேரேஜ் ஹால் என பெயர் வந்துள்ளது. 

கொரோனா காலகட்டங்களில் திருமணம், காது குத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்வதற்கும், அதில் பங்கேற்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அப்போதுதான் இந்த மொபைல் திருமண மண்டபங்கள் அறிமுகமாகின.

குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்க வேண்டிய நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நெருக்கடியும் இது போன்ற மொபைல் திருமண மண்டபங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. இது குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களும் இதனை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதுபோன்ற மேலை நாடுகளில் ஏற்கனவே பல அம்சங்கள் இருந்தாலும் இந்தியாவில் தற்போது தான் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கண்டெய்னரில் இது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் இந்த மொபைல் திருமண மண்டபத்தில் தோராயமாக 30-40 வரை அமர முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *