சுங்கச்சாவடியில் கடுமையாக தாக்கி கொண்ட பெண்கள் … எதற்காக தெரியுமா?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகர சுங்க சாவடியில் வேலை செய்யும் பெண்ணும், பயணி ஒருவரும் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாசிக் அருகே உள்ள பிம்பால்கான் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் இரு பெண்களும் கடுமையாக ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இவர்கள் சண்டையிடுவதை ராஜ் மாஜி என்ற ஒருவர் ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இவர்கள் கடுமையாக தாக்கி கொண்டதோடு மட்டுமல்லாமல் கெட்ட வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிகொண்டுமுள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை அடுத்து இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சுங்க சாவடிகள் தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுங்க சாவடிகளில் சண்டைகள் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம் கேரளாவிலும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கார் டிரைவர் ஒருவர் சுங்க சாவடியில் பணிபுரியும் ஊழியரின் டி-சர்ட்டைப் பிடித்து ஓடும் காருடன் இழுத்துச் சென்றதில், குறிப்புழா சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

அதேபோல ராஜஸ்தான் மாநிலம் ராஜகார்க் சுங்கசாவடியில் பயணி ஒருவர் சுங்க சாவடியில் பணிபுரியும் ஒரு பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். ராஜ்குமார் குர்ஜார் என்ற நபர் தனது வாகனத்தை ஃபாஸ்டேக் இல்லாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.அந்த நபர் தான் உள்ளூர்வாசி என்றும், எனவே சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் எப்படி சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்க முடியும் என்று கேட்ட அந்த பெண்ணை ராஜ்குமார் குர்ஜார் கடுமையாக தாக்கியுள்ளார். அவரது தாக்குதலுக்கு அந்த பெண்ணும் பதிலடி கொடுத்த சம்பவம் சில தினங்களுக்கு முன்பு வைரலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *