கலகலப்பு கஃபே — பாலிடிக்ஸ் கார்னர்

“என்ன மொசக்குட்டி… இந்த வாரம் என்ன ஹாட் டாபிக்???”

“ஹாட்டின் பீடிகள்னு ஒரு விளம்பரம் ஒண்ணு சுத்துது சித்தப்பு… அதுதான் ஹாட் டாபிக்கே!”

“மலபார் பீடி கேள்விப்பட்டிருக்கேன்… இதென்னடா புதுசா ஹாட்டின்?!”

“லவ் பீடி தான்! இதோட விளம்பரத்துல ஆலும் வேலும் பல்லுக்குறுதி! ஹாட்டின் பீடி நெஞ்சுக்குறுதி!’ன்னு போட்டிருக்குறது தான் ஹைலைட்டே! இந்த பீடியைக் குடிச்சா ஹார்ட் அட்டாக்கே வராது போல!”

“க்கும்… ஒருவேளை ஆர்கானிக் பீடியா இருக்கும்போல! இப்பல்லாம் எதையுமே ஆர்கானிக்னு சொன்னாலே உடம்புக்கு ஏத்ததுன்னு நம்பிடுறாங்க மொசக்குட்டி! அதுசரி… இதைத் தாண்டி அரசியல்ல பரபரப்பான விஷயம் எதாவது இருந்தா சொல்லு!”

அதிர்ச்சி - Twitter Search / Twitter

“இந்த வாரம் முழுக்க பாஜக தான் ஹாட் டாபிக்கே சித்தப்பு… ஒரு காலத்துல மிஸ்டு கால் குடுத்தவனுங்கள எல்லாம் கட்சியில சேர்த்தாங்கல்ல… இப்ப என்னடான்னா ஒவ்வொருத்தரையும் எங்க கட்சி கிடையாதுன்னு கழட்டி விட்டுக்கிட்டு இருக்காங்க!”

“இதென்ன புதுக்கதை மொசக்குட்டி?”

“ஏற்கெனவே பாஜகவோட ஆன்மீக குரூப் மாதிரி காட்டிக்கிட்டு சிலர் வசூல்ல இறங்குனதாக அவங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு அண்ணாமலை அறிக்கை விட்டாரு…”

“அப்புறம்?’

“இப்ப எதோ பாஜகவோட தொழிற்சங்கம்னு சொல்லிட்டு ஒரு குரூப் போலியா இயங்கிட்டு இருந்தது போல… இப்ப அவங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமேயில்லைன்னு இன்னொரு அறிக்கையை அண்ணாமலை விட்டிருக்காரு!”

Making people suffer? BJP leader Annamalai condemned | மின் கட்டணம் உயர்வு:  நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? பாஜக தலைவர்  அண்ணாமலை ...

“போற போக்கைப் பார்த்தால் பாஜகவுல இருக்குற யாருக்குமே எங்களோட தொடர்பில்லைன்னு சொன்னாலும் சொல்லிடுவாரு போல… ரொம்ப கன்பியூஸ் பண்ணிட்டாங்களே!”

“ஆமா சித்தப்பு… இருக்குற பிரச்சனை போதாதுன்னு இப்போ இமானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்துவதில் புதுசா ஒரு பஞ்சாயத்து அண்ணாமலைக்கு வந்திருக்கு!”

“ஆஹா… இதென்ன புதுசா?”

“எல்லாம் சசிகலாவப் பத்துன மேட்டர் தான்!”

“என்னது? சசிகலாவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனையா? இது எப்ப? அவங்க பிரச்சனை பண்ண மாட்டாங்களே!”

“சித்தப்பு இது அந்த சசிகலா இல்ல… சசிகலா புஷ்பா!”

“அந்தம்மா ஏற்கெனவே நிறைய சர்ச்சை பண்ற ஆளாச்சே! இப்ப என்ன புது சர்ச்சை?”

“அதுவந்து சித்தப்பு… அதுவந்து…”

“சொல்லுடா மொசக்குட்டி… எதுக்கு மென்னு முழுங்குற?”

“அதுவந்து சித்தப்பு…. அத எப்படி என்னோட வாயால சொல்லுவேன்?”

“இதுக்காக வாய கடன் வாங்கிட்டா வர முடியும்… சும்மா சொல்லுடா…”

“இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜக சார்பில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா கலந்துகிட்டாங்க… அதுல சசிகலா புஷ்பா பக்கத்துல சின்ன பாஜக மூத்த நிர்வாகி ஒருத்தர் தன்னோட கையால அவங்ககிட்ட சில்மிஷம் பண்ண ட்ரை பண்ணியிருக்காரு… அவரோட கைய சசிகலா புஷ்பா தட்டித்தட்டி விடப் பாக்குறாங்க… இருந்தும் அவர் முயற்சி பண்ணி இடிச்சுக்கிட்டு மோசமா நடந்துகிட்டது வீடியோவில் தெளிவா பதிவாகிடுச்சு! அது சமூக வலைத்தளம் முழுக்க வைரலாகிடுச்சு!”

கலகலப்பு கஃபே - சசிகலா புஷ்பா... பாலியல் சீண்டல்.

“பாஜக மேல ஏற்கெனவே ஜல்சா பார்ட்டின்னு எதிர்க்கட்சிக்காரங்க விமர்சனம் வைக்கிறப்ப… இது வேறயா!”

“ஆமா சித்தப்பு… இதுல ஒரு கூத்து என்னன்னா… அந்த சம்பவத்தோட இன்னொரு வீடியோவ பாஜகவோட காயத்ரி ரகுராம் போட்டு, அப்படி ஒண்ணும் தப்பா நடக்கல… இதை பெரிசுபடுத்திட்டாங்கன்னு வேற ட்வீட் பண்ணியிருந்தாங்க… அந்த வீடியோல இன்னும் தெள்ளத்தெளிவா அது பதிவாகியிருந்தது தான் ஹைலைட்டே!”

“ஒருவேளை காயத்ரி ரகுராம் வேணும்னே அந்த வீடியோவைப் போட்டிருக்குமோ?”

“இருக்கும் சித்தப்பு… அதுக்கு அண்ணாமலை மேல ஏற்கெனவே காண்டு இருக்கு… அதனால இந்த பிரச்சனைய பெருசாக்கணும்னே அந்த வீடியோவைப் போட்டு இருக்கலாம்…”

“ஒருவழியா அந்த பிரச்சனை ஓய்ஞ்சதா”

“எங்க ஓய? சசிகலா புஷ்பாவோட கணவர் இப்ப அந்த விவகாரத்தை கையில எடுத்துக்கிட்டாரு… இந்த விவகாரத்துல சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி மேல நடவடிக்கை எடுத்தாகணும்னு அண்ணாமலைக்கு கோரிக்கை வச்சிருக்காரு!”

அண்ணாமலை vs காயத்ரி ரகுராம்

“பாவத்த… கர்நாடகாவுல சிங்கம் மாதிரி இருந்த மனுஷனை இப்ப இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்து பண்ண வச்சிட்டாங்களே!”

“ஆமா சித்தப்பு… என்ன பண்றது… நாய் வேஷம் போட்டால் குலைச்சுத்தான ஆகணும்!”

“டேய் மொசக்குட்டி… வேஷம்னு சொன்னதும்தான் எனக்கு ஒரு போஸ்டர் நினைவுக்கு வருது… பிஜேபிகாரங்க வித்தியாசமா போஸ்டர் அடிக்கணும்னு மோடிக்கு சமூக நல்லிணக்க பெரியாரேன்னு போஸ்டர் அடிச்சிருக்காய்ங்க போல! இப்ப அந்த போஸ்டரை எடுத்துப்போட்டுத்தான் சமூக வலைத்தளத்துல வைரலா மோடியை கிண்டலடிச்சுட்டு இருக்காங்க!”

மோடியின் பிறந்தநாளுக்கு "சமூக நல்லிணக்க பெரியாரே" பட்டத்துடன் பேனர்..  எதிர்ப்பு குரலால் பரபரப்பு..! - Tamil Spark

“ஹஹஹ… இப்பல்லாம் பெரியார் பெயரைச் சொன்னால்தான் தமிழ்நாட்டில் காலத்த ஓட்ட முடியும்னு அவங்களுக்கே புரிஞ்சு போச்சு போல சித்தப்பு! ஹஹஹ!”

“பெரியார் மண்ணுன்னா சும்மாவா?! ஹஹஹ!”

-புத்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *