உலகப் பணக்காரர் பட்டியலில் அதிரடி காட்டும் அதானி..!!

உலகப் பணக்காரர் பட்டியலில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 155.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் 10 பேரில் ஒருவராக இருக்கிறார்.

அதானி குழுமத்தின் பங்குகள் ஏற்றம் பெற்றதே இதற்கு காரணம் என கூறுகின்றனர். அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன் என 4.97 முதல் 3.45 சதவீதம் வரை அவரது நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.40,000 கோடி உயர்ந்துள்ளது.

அதனால் அவர் ஃபோர்ப்ஸ் நிறுவன பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப் பட்டியலில் எலான் மஸ்க் சுமார் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் பெசோஸ் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் அதானி மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரண்டு இடங்களில் எலான் மஸ்க் மற்றும் பெசோஸ் உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *