கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்ன மொசக்குட்டி… ராகுல் காந்தி பாத யாத்திரைக்கு கூட்டம் எக்குத்தப்பா அதிகமாகிட்டு இருக்கு போல?”

“ஆமா சித்தப்பு… பாஜககாரங்களுக்கு வயிறெல்லாம் எரியுது! இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் கட்சிக்காரங்களுக்கே நம்ம கட்சியில இன்னும் இவ்ளோ மக்கள் இருக்காங்களான்னு ஆச்சர்யமா இருக்குதாம்!”

“இருக்காதா பின்ன? பத்து பதினைஞ்சு கோஷ்டியா சண்டை போட்டுட்டே இருந்தவங்களுக்கு இப்போ அம்புட்டு கோஷ்டியும் ஒண்ணு சேர்ந்தால் இவ்ளோ கூட்டம் சேரும்கறது ஆச்சர்யம் தான?”

Rahul gandhi Bharat Jodo Yatra

“ஆமா சித்தப்பு… இந்த பிஜேபிகாரங்க வேல் யாத்திரைன்னு சொல்லிட்டு கூட்டம் சேர்த்தப்ப கூட இம்புட்டு கூட்டம் சேரல… அவ்ளோ பேர் ராகுல்காந்தி பின்னால நடந்துட்டு போறதப்பார்த்தால் ஆச்சர்யமாத்தான் இருக்கு!”

“ஆனா மொசக்குட்டி, எனக்கென்னவோ இந்த கூட்டத்துல காங்கிரஸ் கட்சிக்காரங்கன்னு இல்லாம, கட்சி சாராத பொதுமக்களே நிறைய கலந்துக்கற மாதிரி தெரியுது. நேரு குடும்பத்துல ராகுல் காந்திக்குன்னு தனி மதிப்பு இன்னைக்கு வரைக்கும் நம்ம மக்கள் மத்தியில இருக்கு… அதும், மோடிக்கு எதிரா இவர் தலைமையில பெரிய எழுச்சி வராதான்னுதான் நம்ம மக்கள் எதிர்பார்த்துக்கிட்டே இருக்காங்க!”

“ஆமா சித்தப்பு… அதென்னவோ, போன வாரத்துல கெஜ்ரிவால் வந்து நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாரு… இப்போ ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்துறாரு… வட மாநிலத் தலைவர்கள் இப்போ தமிழ்நாட்டு மேலயும், தமிழக மக்கள் மேலயும் தனி மதிப்பா இருக்காங்க சித்தப்பு!”

MK stalin invites Aravind Kejariwal to for puthumai pen thittam

“அதுக்கு காரணம் ஒண்ணே ஒண்ணு தான்டா… இந்த நாடே மோடி பின்னால போறப்ப, தமிழ்நாடு மட்டும் தனிச்சு, மோடிக்கு எதிரா நிக்குதுல்ல! அதான்!”

“ஆமா சித்தப்பு… இதுலயே வயிறெரிஞ்சு போயி ராகுல் காந்தியோட சட்டையோட பிரான்ட் என்னன்னு கூகுள்ல தேடிப்பார்த்து, அந்த சட்டையோட விலை 40 ஆயிரத்துக்கு மேலன்னு பாஜக அதிகாரப்பூர்வ பக்கத்துலயே அதை விமர்சனம் பண்ணி பதிவு போட்டிருக்காங்க சித்தப்பு!”

T-shirt war between BJP, Congress: Does Rahul Gandhi's shirt cost Rs 41K?

“ஆமாம்டா மொசக்குட்டி… அதே பதிவுல, மோடியோட கோட்டு விலை எத்தனை லட்சம்னு எழுதி கடுமையா கமென்ட் பண்ணியிருக்காங்க பல பேர்! அதுலயும் காயத்ரி ரகுராம் போட்ட ட்வீட்டுக்கு வந்த பதில் தான் வைரலாயிடுச்சு!”

“சித்தப்பு… அதோட விட்டா பரவாயில்ல… இன்னும் சிலர், மெனக்கெட்டு கூகுளில் சர்ச் பண்ணி ராகுல் காந்தி சட்டையோட விலைய பார்த்தீங்களே… அப்டியே பெட்ரோல் பங்க்ல பெட்ரோல், டீசல் விலை என்னன்னு விசாரிங்க… அப்டியே கேஸ் சிலிண்டர் கடைல கேஸ் சிலிண்டர் விலை விசாரிங்க… அப்டியே போற வழில டோல்கேட் கட்டணத்த விசாரிங்க… அதையும் அப்டியே எடுத்து பெருமையா பதிவு போடுங்க! நாங்களே காஸ்ட்லியான இந்தியாவுலதான் கடந்த 8 வருசமா வாழ்ந்திட்டு இருக்கோம்னு பதிலடி குடுத்திருக்காங்க!”

“மொசக்குட்டி… இதேபோல நம்ம நிம்மி மாமி எங்கயோ வம்பு பண்ணி பிரச்சனையாகிடுச்சாம்ல?”

“ஆமா சித்தப்பு… தெலுங்கானால ஒரு ரேஷன் கடைல நிம்மி மாமி இன்ஸ்பெக்சன் மாதிரி போயிருக்காங்க… அங்க ரேஷன் பொருளெல்லாம் ஒழுங்கா வருதான்னு விசாரிக்காம, ஏன் மோடி போட்டோவை அங்க மாட்டலைன்னு கேள்வி கேட்டிருக்காங்க.. மோடி போட்டோவை மாட்டணும்னு கலெக்டரோட தகராறு பண்ணியிருக்காங்க… இது பிரச்சனையாகி, அவருக்கு தெலுங்கானா உணவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவிச்சிருக்கார்… அதோட பிரச்சனைய விடாமல், சமையல் சிலிண்டர்களில் பிரதமரோட படத்தையும், சமையல் சிலிண்டரோட விலையையும் எழுதி, அதை வேன்ல ஏத்தி ஊர்வலமாக்கி அசிங்கப்படுத்தியிருக்காங்க!”

✓TRS Leaders Fix PM Modi Photos To Gas Cylinders Viral - Janta Yojana

“இந்த அவமானம் பிரதமருக்கு தேவையா மொசக்குட்டி!”

“இப்டித்தான் சித்தப்பு வான்ட்டடா பிரச்சனைல சிக்குறதே பாஜககாரங்களுக்கு வேலையா போயிடுச்சு! இப்டி இவங்க பண்றதால, இப்போ ஆசியக் கோப்பைல இந்தியா கேவலமா தோத்ததைக்கூட மோடி ஆட்சியில் இந்திய அணி படுதோல்வின்னு சொல்லி மோடி ஆட்சியைக் கிண்டல் பண்ணி பேசிட்டு இருக்காங்க!”

“இதுவே ஆசியக்கோப்பையை இந்தியா வின் பண்ணியிருந்தால் அதை மோடி ஆட்சியோட சாதனையில் அவங்க சேர்த்திருப்பாங்களே! அதனால இதைக் கிண்டல் பண்ணதிலும் தப்பில்லை! ஆக, தேசபக்திங்கறதையே கிண்டலுக்குரியதா மாத்துனதுதான் இவங்க சாதனையே!”

Union minister Smriti Irani's daughter allegedly ran 'illegal bar' in Goa,  served legal notice

“சித்தப்பு… இன்னொரு விஷயம்… நம்ம ஸ்மிர்தி இரானியோட பொண்ணு ஒரு நான்வெஜ் ஹோட்டல் நடத்துதுன்னு செய்தி வந்துச்சுல்ல… அதை அந்தம்மா கடுமையா மறுத்துச்சு… இப்ப அதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்துல போட்டுக் கேட்டதுல, அந்தம்மாவோட கணவரும், பொண்ணும் தான் நடத்துறாங்கன்னு தெரிஞ்சிபோச்சி! இப்போ அவங்க பீஃப் கடை நடத்துறது வெட்டவெளிச்சமாயிடுச்சு! ஹஹஹ! ஊருக்குத்தான் உபதேசம் போல சித்தப்பு!”

“அதானடா மொசக்குட்டி! பார்த்து… உன்னையும் சூப் போட்டுடப் போறாங்க! மொசக்குட்டி சூப்னு! ஹஹஹ!”

-புத்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *