முன்னாள் ராணுவ வீரர்களிடம் ஆயிரம் கோடி ரூபாயை ஆட்டய போட்ட ஆன்லைன் காயின்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்படும் யுனிவர் காயின் என்கிற நிறுவனம் 10 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 20 ஆயிரம் பேரிடம் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி -. முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அருண்குமார் என்பவர் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு துவங்கி நடத்தியுள்ளார்.இந்த நிறுவனத்தில் 7, 70,000 டெபாசிட் செய்தால் இணையதள முகவரி வழங்கப்படும் அதில் உங்கள் டெபாசிட் தொகைக்கு பாயிண்ட் காயின் அதிகரிக்கும் அதன்படி வாரம் வாரம் 93 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு திரும்ப செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. 

இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் சேர்ந்த நந்தகுமார் ஷங்கர் ஞானசேகர் சீனிவாசன் பிரகாஷ் வேலன் ஆகியோர் முகவர்களாக சேர்ந்துள்ளனர். இவர்கள் மத்தூர் போச்சம்பள்ளி காவேரிப்பட்டினம் என மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி மேற்கண்ட நிறுவனத்தில் டெபாசிட் செய்ய வைத்துள்ளனர் அதன்படி ஏராளமான பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் முதல் 30 லட்சம் வரையில் டெபாசிட் செய்தனர். இந்த நிலையில் நிறுவனத்தில் சார்பில் ஒரு சில வாரங்கள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. 

பிறகு நிறுவனத்தின் சார்பில் பணம் வழங்கபடவில்லை என  முகவர்களாக செயல்பட்ட நந்தகுமார் ஷங்கர் ஆகியோர் அருண்குமார் மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் மனு அளித்தனர். நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி டெபாசிட் பெற்றுக் கொண்டு சுமார் 500 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்திருப்பதாக புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரகாஷ் தலைமையில் 60க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் மனு அளித்தனர் அந்த மனுவில் மேற்கண்ட நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் அதிக லாபத்துடன் திருப்பித் தருவதாகவும் அதிக நபர்களை சேர்த்தால் ஐபோன் கார் வீட்டுமனை மற்றும் கோவா தாய்லாந்து நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என ஆசை வார்த்தைகள் கூறினர் 

அதனை நம்பி நான் ஏழு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தேன் அதேபோல் எனது உறவினர்கள் 60 பேரை டெபாசிட் செய்ய வைத்தேன் அவர்களுக்கு கீழ் என சுமார் 210 பேர் அந்த நிறுவனத்தில் 20 கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்தனர் டெபாசிட் செய்யப்பட்ட சில வாரங்கள் சிறிது லாபம் கிடைத்தது பிறகு அந்த நிறுவனத்தில் சார்பில் நிதி வழங்கப்படவில்லை இது தொடர்பாக மேற்கண்ட நந்தகுமார் ஷங்கர் பிரகாஷ் வேலன் சீனிவாசன் ஆகியவுடன் கேட்டபோது பணம் வராது முடிந்தால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துவிட்டனர்.

இதனால் மேற்கண்ட நபர்கள் 20 கோடி ரூபாய் அளவிற்கு எங்களிடம் மோசடி செய்துள்ளனர் இவை தவிர தமிழகத்தில் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை வேலூர் மதுரை கன்னியாகுமரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் அண்டை மாநிலங்களுமான ஆந்திரா கர்நாடகா போன்ற இடங்களில் 10 ஆயிரம் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் உட்பட 20000 பேரிடம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளனர். 

மேற்கண்ட நபர்கள் ஒன்றாக இணைந்து கூட்டு மோசடி செய்துவிட்டு இன்று அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒருவர் மீது புகார் அளித்துவிட்டு மற்றவர்கள் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் மேற்கண்ட நபர்கள் எங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு சொந்த வீடு நிலம் கார் போன்றவை வாங்கிக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் அவர்களை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்றும்  முறைகேடு செய்து பெறப்பட்ட டெபாசிட் தொகையை பெற்று தருமாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *