இந்தியர் மீது தாக்குதல் நடத்தும் போலந்தில் நபர்..!!

இந்தியர்கள் ஒட்டுண்ணிகள் ஊடுருவல்காரர்கள் என போலந்து நாட்டில் இந்தியர் ஒருவரை அமெரிக்காவை சேர்ந்தவர் விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 21ம் தேதி, கலிபோர்னியாவில் ஜெயராமன் என்ற இந்தியரை, அமெரிக்கர் ஒருவர் இனரீதியாக விமர்சித்தும், மதத்தை குறிப்பிட்டும் திட்டியிருந்தார்.

இந்நிலையில், போலாந்து நாட்டில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்தியரை இன ரீதியாக கடுமையாக விமர்சித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Go back to your country”-Criticized Indian in Poland

தன்னை அமெரிக்காவை சேர்ந்தவர் என்றும், வெள்ளை இனத்தை சேர்ந்தவன் என்று அடையாளப்படுத்தி கொண்டு அவர் இந்தியரை பார்த்து கூறுகையில், போலந்தில் ஏன் வசிக்கிறாய் அதற்கு இந்தியர், என்னை ஏன் வீடியோ எடுக்கிறாய் என கேட்டதற்கு, அந்த நபர் காரணம் நான் அமெரிக்கன். அமெரிக்காவில் உன்னைப் போன்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

உங்களது நாட்டிற்கு திரும்பி செல்ல மாட்டீர்களா. எங்களின் கடின உழைப்பை எடுத்துக்கொள்ள வெள்ளைக்காரர்கள் நிலத்திற்கு ஏன் வந்துள்ளீர்கள் என ஐரோப்பியர்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். உங்களது சொந்த நாட்டை கட்டமைக்காதது ஏன்? ஒட்டுண்ணியாக இருப்பது ஏன்? எங்களது இனத்தை படுகொலை செய்கிறீர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *