மடாதிபதி பாலியல் புகார்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!!

மடாதிபதி மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், 7 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் சித்ரதுர்கா வில் இருக்கும் இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகளை மடாதிபதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அக்கமாதேவி, வார்டன் ரஷ்மி, பசவநித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த பாலியல் வழக்கு சித்ரதுர்கா போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தப்பியோடியதாக கூறப்பட்ட சிவமூர்த்தி முருக சரணரு சித்ரதுர்காவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஆஜராக தன் மீதான பாலியல் வழக்கு குறித்து போலீசாரிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரியுள்ளது. இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *