ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 1.43 லட்சம் கோடி வசூல் – ஒன்றிய அரசு

கடந்த ஆகஸ்ட்  மாதம், 1.43 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஆக வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வசூலை விட 28 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,43,612 கோடி வசூலாகி உள்ளது. தற்போது பொருளாதாரம் மீண்டு வருவதால், அதன் நேர்மறையான தாக்கம் ஜிஎஸ்டி வசூலில் பிரதிபலிக்கிறது. தொடர்ந்து 6 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் வசூலாகி உள்ள 1.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஆனது, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வசூலான ரூ.1,12,020 கோடி ஜிஎஸ்டி யை விட 28 % அதிகம் என கூறியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *