கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்ன சித்தப்பு ரொம்ப யோசனையா இருக்குற?”

“மொசக்குட்டி, நாளு ரொம்ப ஸ்பீடா ஓடுது பாருடா… அதை நினைச்சித்தான் யோசிச்சிட்டிருக்கேன்!”

“நாளு மட்டுமா ஓடுது… உனக்கும் தான் இப்பல்லாம் வழுக்கை ஏறிட்டே போகுது… மீசையெல்லாம் நரைச்சுப்போச்சு… அதென்ன இப்ப இதைப்பத்தி சிந்தனை? என்ன மாதிரி இளவட்டப் பசங்க கல்யாணம் ஆகலையேன்னு வருத்தப்பட்டு யோசிச்சா நியாயம் இருக்கு!”

“அதில்லடா… போன வருஷம் இதே நேரத்துல தான் பாஜக தலைவர் கே.டி.ராகவன் பூஜையறையில மஜா பண்ணி வீடியோல மாட்டுனாரு… இப்பத்தான் அந்த சம்பவம் நடந்த மாதிரி இருந்துச்சு… அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிடுச்சே!”

“ஓ… அதான் யோசனையா? அந்த வீடியோவ விடு சித்தப்பு… இப்ப பாஜக தலைவர் அண்ணாமலையே ஒரு ஆடியோல மாட்டியிருக்காரு கேள்விப்பட்டியா?”

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவினரை  ரவுண்டி கட்டிய போலீஸ். 5 பேர் கைது

“அட, அண்ணாமலையே மாட்டிக்கிட்டாரா? அவரு ஓவரா பேசுறதப் பாக்குறப்பவே என்னைக்காவது மாட்டிப்பாருன்னு தான் நினைச்சேன்! சிக்கிட்டாரா?”

“ஆமா சித்தப்பு… மதுரை ஏர்போர்ட்ல பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மேல செருப்பை வீசுனாங்கல்ல… அதை வச்சு அரசியல் பண்ண நினைச்சது ஆடியோவா ரிலீஸ் ஆகியிருக்கு!”

“அடக்கொடுமையே… என்னன்னு வந்திருக்கு?”

“மதுரை பாஜக நிர்வாகி ஒருத்தர் கூட அந்த சம்பவத்தை வச்சு பேசுறாரு… அதுல, அந்த பிரச்சனைய வச்சு அரசியல் பண்ணலாமா? நிலவரம் என்ன மாதிரி இருக்கு?ன்னெல்லாம் விசாரிக்கிறாரு…”

“கொய்யால… இவரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரின்னு தனா சொன்னாங்க… இவரோட நடவடிக்கையெல்லாம் பார்த்தால் அவ்ளோ சரியா படலையே… சமூக விரோதிங்களை ஒடுக்க வேண்டிய இவரே சமூக விரோதி மாதிரி கலவரம் பண்றாப்ல பேசியிருக்காரே!”

“ஆமா சித்தப்பு… இப்ப என்னடான்னா அந்த குரலே தன்னோட குரல் இல்லைன்னு சொல்லி மழுப்புறாரு!”

“க்கும்.. இவரு அப்புராணி மாதிரி இருந்தாக்கூட சொன்னா நம்புவாங்க…ஏற்கெனவே பத்திரிகைகாரங்க கேள்வி கேட்டாலே, உனக்கு 200 ரூபாய் தரவா? 1000 ரூபா தரவா? 2000 ரூபா தரவான்னு ஓவர் வாய்த்துடுக்காத்தான் பேசிட்டு இருப்பாப்ல… எல்லா தலைவர்களையும் மட்டமாத்தான் பேசுவாப்ல… கட்சிக்காரங்களையே மதிக்க மாட்டாப்ல… அதான் கட்சிக்காரங்களே இவரை டைம் பார்த்து மாட்டிவிட்டிருக்காய்ங்க போல!”

“ஆமா சித்தப்பு… இனிமேல் கட்சிக்காரங்க கூட போன்ல கூட மனுஷன் பேசுறதுக்கு யோசிப்பாப்ல!”

“இதுக்குத்தான் மொசக்குட்டி, அண்ணாமலைன்னு பெயரு வச்சாலே திருவண்ணாமலை மாதிரி உசரம்னு நினைச்சுக்கக்கூடாதுன்னு நம்ம அதிதி சங்கர் சொல்லியிருக்காங்க!”

BJP leader Annamaali: The next scene of theater politics is patriotism?  Annamalai Question to the Prime Minister - in.gacialisdtiyk.com

“யோவ் சித்தப்பு… நீயும் அதிதி சங்கரோட மொக்கை காமெடிக்கு ரசிகராவா இருக்குற?”

“பின்ன… முன்னல்லாம் நான் டைரக்டர் ஷங்கரோட படத்துக்கு ரசிகனா இருந்தேன்… இப்பல்லாம் அதிதி சங்கரோட மொக்கை காமெடிக்குத்தான் ரசிகர்!”

“அப்ப… அந்த கடி ஜோக்குக்கு கைத்தட்டுற கும்பல்ல நீயும் ஒருத்தர் தானா சித்தப்பு?”

“ஏண்டா இம்புட்டு சந்தேகமா பாக்குற? இதெல்லாம் ஓவரா யோசிக்கக்கூடாதுடா! அப்பப்ப கேட்டு சிரிச்சுக்கணும்!”

“க்கும்… இப்பல்லாம் அதிமுக சண்டையப் பாக்குறப்ப தான் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது சித்தப்பு… ஓபிஎஸ்ஸுக்கு சாதகமா தீர்ப்பு வந்ததுமே… இனிமே நாம எல்லாரும் இணைந்து ஒத்துமையா வாழணும்னு ஓ.பி.எஸ். டயலாக் விடுறாரு! ஈபிஎஸ் என்னடான்னா… என்னால ஓபிஎஸ் கூட இணைந்து கட்சி நடத்த சான்ஸே இல்லைன்னு நீதிமன்றத்துல புலம்புறாரு!”

பலப்பரீட்சை தொடங்கிய ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள்: யார் யார் எந்தப் பக்கம் - OPS  vs EPS for single leadership of AIADMK who's who supporter | Indian Express  Tamil

“ஆமான்டா மொசக்குட்டி… அதப் பார்க்குறப்ப, நீதிமன்றத்துல என்னவோ டைவர்ஸ் கேஸ் நடக்குற மாதிரியே இருக்குதுடா… இனிமே புருஷன் கூட சேர்ந்து வாழவே முடியாது… அந்த மனுஷன் தொல்லை தாங்கல… எங்களப் பிரிச்சு விட்டுடுங்க… நான் தனியா இருக்கேன்னு பொண்டாட்டி புலம்புற மாதிரியே இருக்குதுடா!”

“எனக்கும் அப்டித்தான் தெரியுது சித்தப்பு… ஆனாலும் ஒரே வீட்டுக்குள்ள ரெண்டு அடுப்பு மாதிரி ஒரே கட்சிக்குள்ள ரெண்டு பேருமே சேர்ந்திருக்குற மாதிரித்தான் தீர்ப்பு வரும் போல!”

“ஆமா சித்தப்பு… அடுத்த தேர்தல் வரைக்கும் இப்டி முறைச்சுக்கிட்டே தான் அவங்க குடும்பம் நடத்தியாகணும் போல!”

“புரட்சி தலைவர்… புரட்சி தலைவி மாதிரி… இனி அந்த கட்சி அலுவலகத்திலயும் தெனமும் புரட்சி தான் வெடிக்கும் போல! ஹஹஹ!”

– புத்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *