சர்ச்சை பேச்சு: அமெரிக்காவில் இந்திய பெண்களுக்கு நடந்தது என்ன..?

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கா பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் இந்தியப் பெண்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசுவதோடு நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கு திரும்பி போங்கள் என்று ஆவேசமாகப் பேசுகிறார்.

டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியப் பெண்கள் நால்வர் ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு கார் பார்க்கிங் இடத்தில் நிற்கின்றனர். அப்போது அங்கே வரும் மெக்சிக்கோ அமெரிக்கப் பெண் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தை தொடங்குகிறார்.

அந்தப் பெண், இந்தியர்களாகிய உங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இந்தியர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்கு வந்துவிடுகின்றனர். நான் எங்கு சென்றாலும் இந்தியர்கள் இருக்கின்றனர். 

Google Trends Racism affected Indian Origin womens Video | வைரலாகும் இனவெறி  தாக்குதல் வீடியோ | World News in Tamil

நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கு திரும்பி போங்கள் என்று கூறுகிறார். அவருடைய பேச்சுக்கிடையே அவ்வப்போது ஆபாச ஆங்கில வார்த்தை பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அவர் திடீரென நான்கு இந்தியப் பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபடுகிறார். அந்தப் பெண்ணின் செயல்பாட்டை இந்தியப் பெண்கள் சாதுர்யமாக தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான வீடியோவை ட்விட்டரில் அவர்கள் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது போலீசார் டெக்சாஸ் நகரில் ப்ளேனோ பகுதியைச் சேர்ந்த ஸ்மரால்டா அப்டன் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், அச்சுறுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *