மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று – அவதியில் மக்கள்!

கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வீக்கம் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்திற்குள், கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. டெல்லி கொரோனா செயலியின் படி(Delhi Corona app), ஆகஸ்ட் 1 ஆம் தேதி, டெல்லி மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 291 இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது  591 ஆக அதிகரித்துள்ளது. ஓமிக்ரானின் புதிய  திரிபான BA.2.75 தான் இந்த  நோய்த்தொற்று அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்து வருவதால், பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை  கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அடுத்த அலை தொடங்குவதற்கு முன்பே, கோவிட் பெருந்தொற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *