முதலாம் ஆண்டு மாணவர்களை கோலாகலமாக வரவேற்ற  மகாலஷ்மி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

சென்னை: மகாலஷ்மி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆவடி   முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு  டாக்டர் ஆல்ஃபிரட் ஜோஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் டி. லதா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து முதலாம் ஆண்டும் மாணவர்களுக்கு உரையாற்றினர். டாக்டர் ஆல்ஃபிரட் ஜோஸ் தனது உரையை ஒரு சிறுகதையுடன் தொடங்கி, உண்மையான வெற்றி என்ன என்பதை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார். நமக்கு பிடித்தமான வேலையை எப்படி புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பது மற்றும் எந்தத் துறையிலும் வெற்றிகரமாகவும் பிரகாசமாகவும் இருப்பது எப்படி என்று பேசியிருந்தார். இவரது உரையாடலுக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அவரது உரையைத் தொடர்ந்து, திருமதி டி.லதா, பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து பேசினார்.சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கல்வியின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் ஏன் சமூகப் பொறுப்புணர்வு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசினார். சிறப்பு விருந்தினர்கள், மகாலஷ்மி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரியின் தலைவர் மகாலஷ்மி குஞ்சிதபாதம், நிர்வாக இயக்குநர் திரு எஸ்.கே. திருக்குமரன், மற்றும்  முதல்வர் டாக்டர். ஆர். குமுதினி ஆகியோர் 2022-23ஆம் கல்வியாண்டிற்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மன்ற உறுப்பினர்களுக்கு பேட்ஜ்களை வழங்கினார்கள். மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *