மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: முழு கட்டணத்தையும் திருப்பி தர உத்தரவு!!

கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க யூஜிசி உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் மாணவர்கள் பாதியில் செல்லும் போது முழு கட்டணத்தையும் செலுத்துமாறு வற்புறுத்தியதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய செயலால் மிகுந்த பாதிப்பு அடைவதாக மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

நாடு முழுவதும் இருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, மாணவர் சேர்க்கையை ரத்து செய்வதற்கு கட்டணம் எதுவும் தனியாக வசூலிக்கக்கூடாது என்று கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது.

இந்நிலையில் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் பாதியில் வெளியேறினாள் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.