அடிதூள்… வரும் 12,13,14 தேதிகளில் தயாரா இருங்க!

Food

உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஆகஸ்ட் 12,13,14 ஆகிய மூன்று தினங்கள் சென்னை தீவுத்திடலில் மாநில அளவிலான உணவுத்திருவிழா நடைபெறுகிறது

உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் வரும் 12,13,14 ஆகிய 3 தினங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு திருவிழா நடத்தப்படுகிறது. சிங்கார சென்னையில் உணவு திருவிழா 2022 என்ற பெயரில் நடைபெறுகிறது. 3 தினங்கள் நடைபெறும் உணவு திருவிழாவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு திரைகலைஞர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

குறிப்பாக, சமையல் கலைகள் பற்றிய விரிவான பரிந்துரைகள், பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், 1500 குழந்தைகளுக்கு அடுப்பில்லாமல் எவ்வாறு சமைப்பது போன்றவையும், எதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும், உணவு வீணாவதை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெறுகிறது.

இறுதி நாளான 14ம் தேதி உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபயணம் காலை 7மணி முதல் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…