செஸ் ஒலிம்பியாட்: திருக்குறளை மேற்கொள் காட்டிய பிரதமர்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ‘Good Evening Chennai.. வணக்கம்’ என்று பிரதமர் மோடி உரையைத் தொடங்கியதை அடுத்து அரங்கமே அதிர கைத்தட்டல் எழுப்பப்பட்டது. ”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி பேசினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான எற்பாடுகளை தமிழ்நாடு குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

“அற்புதமான அறிவாளிகளையும் ஆழமான கலாச்சாரத்தையும் கொண்டது தமிழக மண். தமிழகத்திற்கும் சதுரங்கத்திற்கும் நீண்ட தொடர்பு உள்ளது

. தமிழகத்தில் பல கோவில்கள் பல விளையாட்டுப்போட்டிகளை குறிப்பதாக உள்ளன. தமிழகம் வலிமையான கலாச்சார பெருமைகளைக் கொண்டது

பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்டுள்ளது தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதன் மூலம் சென்னை, மாமல்லபுரத்தின் சுற்றுலா வளர்ச்சியடையும்.

75வது சுதந்திர தின விழா நடைபெறும் நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறுவது பெருமை

அதிதி தேவோ பவ என்று பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பெருமையுடன் சொல்லப்பட்டுள்ளது

விருந்தோம்பல் பற்றி திருக்குறளில் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது

.

நாம் அனைவருமே வெற்றி பெறுபவர்கள்.. எதிர்கால வெற்றியாளர்கள்

அனைவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.