பிரதமருக்கு பிடித்த விளையாட்டு குறித்து முதல்வர் பேச்சு

செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பட்டு, வேட்டி சட்டையில் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடிக்கு சதுரங்க ஆட்டம் மிக பிடித்தமானது என அனைவருக்கும் தெரியும்.

இந்த நாள் இந்தியாவுக்கே பெருமை தரும் நாள், சர்வதேச அளவில் தமிழ்நாடு கவனம் பெற்றிருக்கிறது. சர்வதேச போட்டி ஏற்பாடுகளைச் செய்ய குறைந்தது 18 மாதங்கள் ஆகும் நிலையில், 4 மாதங்களில் தமிழ்நாடு ஏற்பாடு செய்ததுள்ளது. கீழடியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை, அங்கு நடந்த அகழாய்வில் 2 வகையான சுடு மண்ணாலான ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளது;

இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா;

இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கமுடியவில்லை. இதை நான் தொலைபேசியில் தெரிவித்தபோது பிரதமர் தான் கண்டிப்பாக கலந்துக்கொள்வதாக பெருந்தன்மையுடன் தெரிவித்தார் எனக்கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…