செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா

சென்னை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. இன்று முதல் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான தொடக்க விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம், மாலை 4.45 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமைச்சர் துரைமுருகன், எம்பி தயாநிதிமாறன், டிஆர்.பாலு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரியா, தலைமை செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து , இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் வரவேற்றனர். பா.ஜ.க சார்பில், எம்.எல்.ஏ.க்கள் நைனார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

வரவேற்பு முடிந்ததும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், அடையார் விமான தளத்துக்கு சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம், நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார். அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க வழி நெடுகிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்யப்பட்டன. இதில், தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குநர் விக்னேஷ் சிவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினரும் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு, வேட்டி சட்டையுடனும், பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் சதுரங்க பலகையை பிரதிபலிக்கும் வகையிலான துண்டுடனும் போட்டியில் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published.