பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு..!

பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தை மேம்படுத்த ரூ.1.64 லட்சம் கோடியில் புதிய திட்டத்தை செய்யப்படுத்த போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பலப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலை தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் பி.பி.என்.எல். நிறுவனத்தை இணைக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் 5 ஜி அலைக்கற்றை இதுவரை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 9-வது சுற்று ஏலம் நடைபெற்று கொண்டிருக்கிறது என தொலை தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள்  சமீப காலமாக அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனங்களின் மத்தியில் நலிவடைந்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தும் விதமாக ஒன்றிய  அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக  அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…