மீண்டும் ஸ்ட்ரீட் வியூ சேவையை தொடங்கும் கூகுள் நிறுவனம்..!!

இந்தியாவின் 10 நகரங்களில் மீண்டும் ஸ்ட்ரீட் வியூ இன்று முதல் தொடங்க  போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதற்காக டெக் மஹிந்திரா மற்றும் ஜெனிசிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ட்ரீட் வியூ சேவையை மீண்டும் துவங்க  போவதக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து 50 நகரங்களில் தரவுகளை சேகரிக்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள்  ஸ்ட்ரீட் வியூ சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கூகுள் இச் சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஸ்ட்ரீட் வியூ சேவை குறித்து கூகுள் மேப்ஸ் துணை தலைவர் மிரியம் கார்த்திகா டேனியல்  கூறுகையில் இன்று முதல் ஸ்ட்ரீட் வியூ இந்தியாவில் புதிய படங்களுடன் கூகுள் மேப்ஸில் கிடைக்கும். மக்கள் எப்படி ஸ்ட்ரீட் வியூ வசதியை பயன்படுத்த வேண்டும் என்பது விரைவில் விளக்கப்படும் என்றார்.

பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவின் முதல் நகரமாக பெங்களூரில் இந்த சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது.  அதை தொடர்ந்து டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சண்டிகர், அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்த செயல் நடைமுறைக்கு வரும்  என தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.