விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!! கூகுளில் வேலை செய்ய 39 நிராகரிப்பு..!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார் டைலர் என்பவர்  கூகுள் நிறுவனத்தில் 39 நிராகரிப்புகளும் பின் வேலை கிடைத்தை  சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.  டைலர் ஸ்ட்ராடஜி & ஆப்ஸ் நிறுவனத்தின் இணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

ஆனால் அவருக்கு உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் பணி நியமனம் பெற வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம்.  இதற்காக அந்நிறுவனத்தில் அடிக்கடி தனது விண்ணப்பத்தை அனுப்பி வந்தார் டைலர். மொத்தம் 39 முறை அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இருப்பினும் மனம் தளராமல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்று தொடங்கி 39 முறை நிராகரிக்கப்பட்ட பின்னர் 40 வது முறையும் எப்போதும் போல கூகுளுக்கு தன் விண்ணப்பத்தை அனுப்பினார். இந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று கூகுளில் பதில் பணி நியமன ஆணை மின்னஞ்சல் வந்தது.

இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த டைலர், தமது நெடு நாள் கனவு நிறைவேறியது குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தனது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தொகுப்புகளை ஸ்கீரின்ஷாட் தாகவும் அவர் பகிர்ந்துள்ளார். 39 நிராகரிப்புகளுக்கு பின் வெற்றி பெற்றுள்ளேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…