இறந்த பறவைகளை தேடி – முடிவுரை

The Conclusion of Search of Death Birds

கடந்த பதிமூன்று வாரங்களாக இறந்த பறவைகளின் காரணங்களைக் கண்டறிய நான் பயணம் செய்த அனுபவங்களின் மூலம் நம் அனைவருக்கும் ஓரளவுக்கு புரிந்திருக்கும் அதின் நம்முடைய பங்கு என்னவென்று.

பறவைகளின் இறப்பிற்கு பெரும்பாலான அதாவது ஏழு சம்பவங்களில் நேரடியாக மனிதர்களாகிய நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம். நம்முடைய இயற்கைக்கு எதிராக மனிதர்களின் செயல்பாடுகளே என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பறவைகளின் இறப்பிற்கு மட்டுமா ஏன் மனிதர்களின் பிரச்சனைகளான நீருக்கான உலகப்போர், ஆறாவது மிகப்பெரிய அழிவு, போன்றவற்றிற்கும் மனிதர்களின் செயல்பாடுகளே காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. 

 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் Article 51-A (g) ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான இயற்கை சூழலில் வாழ உரிமை உண்டு அதே நேரத்தில் அவற்றை காப்பாற்றிக்கொள்ளும் கடமையும் உள்ளது என்கிறது. 

ஆம் சுற்றுச்சூழல் பிரச்சனை என்பது நம் உரிமை பிரச்சனை. எங்கெல்லாம் சூழல் உரிமை மறுக்கபடுகிறதோ அங்கெல்லாம் அந்த சூழலை நம்பி வாழும் மனிதர்களின் உரிமையும் பறிக்கபடுகின்றன. அதனால் தான் தண்ணீர் என்ற உரிமை குறிபிட்ட மக்களுக்கு மட்டும் கிடைக்காத போது டாக்டர் அம்பேத்கர் போராடினார். இப்பவும் அந்த நிலை தொடர்வதாகவே நம்புகிறேன், அந்த இயற்கையை, அந்த உரிமையை தற்போது விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலிலுக்கு தள்ளபட்டுள்ளோம். பொருளாதாரத்தில் பின் தங்கியவரிகளில் எத்தனை பேர் வீடுகளில் அல்லது பயணங்களின் போது தண்ணீரை விலை கொடுத்து வாங்கி தாகத்தை தனித்துக்கொள்ள முடிகிறது. இன்று டெல்லியில் காற்றை சுத்தம் செய்ய Air purifier குறைந்த பட்ச விலை ரூபாய் 5000 கொடுத்து எத்தனை பேரால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். 

பெரு நிறுவனங்கள் பில்லையும் கில்லி தொட்டிலையும் ஆட்டும் கதை போல மொத்த இயற்கையும் அள்ளவா உறிஞ்சி எடுக்கிறார்கள். வாயில்லா பூச்சிகள் நிரூபிக்க போவதில்லை என்பதனால் அவற்றின் மீது குற்றம் சுமத்தி அவற்றைக் கொல்ல விசங்களையும் தயாரித்து விற்று பின்வாசல் இல்லை முன்வாசல் வழியாக கம்பீரமாக தப்பித்துக்கொள்கின்றனர்.

அதன் விளைவு விவசாயிகள் தற்கொலை வரை நீள்கின்றன. அதொடில்லாமல் மயில்களை கொல்பவர்களை கைது செய்வதும், அடுத்த பயிருடுதலுக்கு வைத்திருக்கும் பணத்தை பிடுங்குவதும், மிகக்கொடுமை. காலங்காலமாக இயற்கையுடன் இணைந்து வாழும் பூர்வகுடிகள் இருவாட்சி பறவையை கொலை செய்த காட்சிக்கு வன்மத்தை கொட்டிய எத்தனை பேர் பெருநிறுவனங்களினால் அழிக்கபட்டு வரும் நம்முடைய அடுத்த தலைமுறைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு கோபமடைகிறோம்.  

இருவாட்சி பறவை

சூழல் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கி பாதுகாப்பு என நினைத்து நம்முடைய எந்த வாரிசுக்காக பணம், நகை, சொத்து போன்றவற்றை சேர்த்து வைக்கிறோமோ அதே வாரிசுகள் ஆரோக்கியமான உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி, சுவாசிக்கக் கூட சுத்தமான காற்றின்றி தினசிரி வாழ்வே போராட்டமாக இருக்கும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. இப்பொழுது அவசர சிகிச்சை பிரிவில் வைத்திரிக்கிறோம். நமது உரிமையை, வாழ்வை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்து இனி சுற்றுச்சூழல் அரசியலுடன் பயணிப்போம்.  

– முனைவர். வெ. கிருபாநந்தினி, பறவைகள் ஆராய்ச்சியாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *